அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் நடித்த மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு, 48, (படம்) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இவர் நேற்று முன்தினம் தொடுபுழாவில் உள்ள மலங்கர அணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார்.
அங்கு அவர் நீரில் மூழ்கியதாகத் தெரிகிறது.
தண்ணீரிலிருந்து மீட்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. இவரது மரணம் கேரள திரை உலகத்தைப் பெரும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.