ராணுவ வீரர்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக சினிமா பார்க்கும் சலுகை வழங்கிய திரையரங்கு

ராணுவ வீரர்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக சினிமா பார்க்கும் சலுகை வழங்கிய திரையரங்கு

1 mins read
80677b90-49c4-45c9-bd74-8176031b4b7b
பாட்னாவில் உள்ள ரிஜென்ட் ஃபன் சினிமா தியேட்டர். படம்: ஊடகம் -

ரணுவ வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக சினிமா பார்க்க அனுமதி அளித்துள்ளது இந்தியாவின் பீகாரில் உள்ள திரையரங்கு ஒன்று.

இதுபோன்ற சலுகையை அறிவித்துள்ள முதல் நிறுவனம் இதுதான்.

வரும் 2021ஆம் ஆண்டு தொடக்கம் முதல் நடப்புக்கு வரும் இந்த சலுகை இந்திய ராணுவ வீரர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. சேவையில் இருந்தாலும் ஓய்வு பெற்றாலும் இது பொருந்தும்.

பாட்னாவில் உள்ள ரிஜென்ட் ஃபன் சினிமா தியேட்டர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ராணுவ வீரர்கள் அவர்களது அடையாள அட்டையை மட்டும் காண்பித்தால் போதுமானது.

ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் தங்களது பாணி இது எனும் அந்தத் திரையரங்க நிறுவனம், மாநிலத்திலுள்ள சுமார் 1,500 பேர் இதனால் பயனடையக்கூடும் என்கிறது.

குறிப்புச் சொற்கள்