ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை: நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த விவசாயிகள் முடிவு

ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை: நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த விவசாயிகள் முடிவு

2 mins read
360bdc20-a68e-4b39-ba86-1aba7402347e
டெல்லி புறநகர் சாலைகளில் விவசாயிகள் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். படம்: ஏஎஃப்பி -

மத்­திய அர­சு­க­ளுக்­கும் விவ­சா­யி­க­ளுக்­கும் இடையே இன்று 6வது சுற்றுப் பேச்­சு­வார்த்தை நடை­பெற உள்­ளது. இம்­முறை 4 முக்­கி­யக் கோரிக்­கை­களை வலி­யு­றுத்த விவ­சா­யி­கள் முடிவு செய்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

புதிய வேளாண் சட்­ட­ங்­க­ளுக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து கடந்த ஒரு மாதத்­துக்­கும் மேலாக பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் டெல்­லி­யில் கூடி போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

மத்­திய அர­சுக்­கும் விவ­சா­யி­கள் சங்­கப் பிர­தி­நி­தி­க­ளுக்­கும் இடையே நடை­பெற்ற ஐந்து சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­கள் தோல்வி கண்­டன. இந்­நி­லை­யில் இன்று ஆறா­வது சுற்­றுப் பேச்­சு­வார்த்­தைக்கு வரு­மாறு விவ­சா­யி­க­ளுக்கு மத்­திய அரசு அழைப்பு விடுத்­துள்­ளது.

திறந்த மன­து­டன் பேச்­சு­வார்த்தை நடத்தத் தயா­ராக இருப்­ப­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்ள நிலை­யில், வேளாண் சட்­டங்­க­ளைத் திரும்­பப் பெறு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் குறித்து மத்­திய அரசு ஆரா­ய­ வேண்­டும் என விவ­சா­யி­கள் தரப்­பில் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை திட்­டம் நீடிக்­கும் என்­பதை சட்­ட­பூர்­வ­மாக உறுதி செய்­ய­வேண்­டும். வேளாண் கழி­வு­கள் எடுப்­பது தொடர்­பாக விவ­சா­யி­க­ளுக்கு அப­ரா­தம் விதிப்­பதை நிறுத்த வேண்­டும் என்­பன உள்­ளிட்ட கோரிக்­கை­களை இன்­றைய பேச்­சு­வார்த்­தை­யில் விவ­சா­யி­கள் தீவி­ர­மாக வலி­யு­றுத்த உள்­ள­னர்.

புதிய வேளாண் சட்­டங்­க­ளால் கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்­குத்­தான் லாபம் என்று டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் சாடி­யுள்­ளார்.

டெல்­லி­யில் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள விவ­சா­யி­கள் மத்­தி­யில் பேசிய அவர், வேளாண் சட்­டங்­கள் தொடர்­பாக விவ­சா­யி­க­ளு­டன் நேருக்கு நேர் விவா­தம் செய்ய மத்­திய அமைச்­சர்­கள் தயாரா என சவால் விடுத்­தார்.

இதற்­கி­டையே பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த 25 விவ­சா­யச் சங்­கங்­க­ளின் தலை­வர்­கள் புதிய வேளாண் சட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் டெல்­லி­யில் மத்­திய வேளாண்­துறை அமைச்­சர் நரேந்­திர சிங் தோமரை நேரில் சந்­தித்து புதுச்­சட்­டங்­களை ஆத­ரிப்­ப­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.