10 ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடக்கும் ஜெயா நகைகள்

10 ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடக்கும் ஜெயா நகைகள்

1 mins read
03eb06fb-783a-43a6-9569-b682aff2b4ed
ஜெயலலிதா. படம்: ஊடகம் -

கர்­நா­டக உயர் நீதி­மன்ற கரு­வூ­லத்­தில் காலஞ்­சென்ற முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வுக்­குச் சொந்­த­மான கோடிக்­க­ணக்­கான மதிப்­புள்ள தங்க, வைர நகை­கள் உள்­ளன. அவற்­றுக்கு ஜெய­ல­லி­தா­வின் உற­வி­னர்­கள் உரிமை கோரு­வார்­களா எனும் கேள்வி எழுந்­துள்­ளது.

அவ்­வாறு யாரும் உரிமை கோரி விண்­ணப்­பிக்­க­வில்லை எனில் அவை அனைத்­தும் அர­சு­டை­மை­யாக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சொத்­துக்­கு­விப்பு வழக்­கில் ஜெயலலிதா சிக்­கி­யதை அடுத்து தனி நீதி­மன்ற உத்­த­ர­வின் பேரில் அவரது வீட்­டில் இருந்த ஏரா­ள­மான தங்க, வைர நகை­கள், பட்­டுச்­சே­லை­கள், கைக்­க­டி­கா­ரங்­கள் உள்­ளிட்ட பொருட்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்டு பெங்­க­ளூ­ருக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டன.

பின்­னர் கர்­நா­டக உயர் நீதி­மன்ற கரு­வூ­லத்­தில் கடந்த பத்­தாண்­டு­க­ளுக்­கும் மேலாக வைக்­கப்­பட்­டுள்­ளன.

சொத்­துக்­கு­விப்பு வழக்­கில் தண்­டனை பெற்ற சசி­கலா, இள­வ­ரசி, சுதா­க­ரன் ஆகி­யோ­ரின் தண்­ட­னைக்­கா­லம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் முடி­வுக்கு வர உள்ளது. இந்நிலை­யில், ஜெய­ல­லி­தா­வின் பொருட்­க­ளுக்கு அவ­ரது உற­வி­னர்­கள் உரிமை கோரு­வார்­களா எனும் கேள்வி எழுந்­துள்­ளது.