'தாதா' சோட்டா ராஜனின் தபால்தலை: புகார், விசாரணை, இடைநீக்கம்

1 mins read
77678075-1018-4699-8067-6c3e2f6d6564
படம்: ஊடகம் -

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தபால் அலுவலகம், நிழல் உலக தாதாக்களான சோட்டா ராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் தபால் தலையை வெளியிட்டுள்ளதால் சர்ச்சை கிளம்பி உள்ளது.

தனது புகைப்படத்துடன் கூடிய தபால்தலையைத் தனி நபர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய 'மை ஸ்டாம்ப்' என்ற திட்டத்தின் கீழ் யாரோ இந்த வேலையைச் செய்து இருக்கிறார்கள் என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் ரஜ்னீஸ் குமார் என்ற அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

விளக்கம் கோரி அந்த அஞ்சல் அலுவலக ஊழியர்கள் சிலருக்குக் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்