உருமாறிய கிருமி பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பு

1 mins read
12c03f07-125e-4301-88d9-6fb674e467eb
படம்: ஏஎஃப்பி -

இந்தியாவில் புதிய வகை கொரோனா கிருமித் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆகியது என்று அதிகாரிகள் இன்று காலை தெரிவித்தனர்.

அதேவேளையில், பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் தலா இரண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி ஒத்திகை வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்தது.

இதனிடையே, இன்று காலை 8 மணிக்கு முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக 20,550 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10.2 மில்லியனாகியது.

புதிதாக 286 பேர் மரணம் அடைந்தனர். மொத்த மரண எண்ணிக்கை 148,439 ஆகியது.

கொரோனா தொற்றுக்கு 262,272 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்