தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனில் அம்பானி நிறுவனங்கள் மீது வழக்கு

1 mins read
3ef4495f-a71f-469d-ada1-4becf380100c
படம்: ஊடகம் -

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் பாராடெல் ஆகிய நிறுவனங்களின் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றில் மொத்தமாக ரூ.86,188 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்கள், போலியான கணக்குகளைக் காட்டி இந்தக் கடன்களைப் பெற்றுள்ளதாக வங்கிகள் வழக்குத் தொடுத்துள்ளன.

வங்கிகள் விரிவான விசா ரணையை மேற்கொள்ள இருப்பதால் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 13ல் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.