டெல்லியில் 15 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடுங்குளிர்; அடர் பனிமூட்டம்

டெல்லியில் 15 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடுங்குளிர்; அடர் பனிமூட்டம்

1 mins read
d1bd7f4f-a4b0-49be-84a8-7ad8cde41636
படம்: ஏஎஃப்பி -

டெல்லியில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்து கடுங்குளிர் நிலவுகிறது.

அதிகாலை வேளைகளில் அடர் பனிமூட்டத்தினால் சாலைகளில் எதுவும் கண்களுக்குப் புலப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் டெல்லியில் 2.4 டிகிரி செல்சியஸ் என்று மிகக்குறைந்த வெப்ப நிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்பநிலை குறைந்து கொண்டே வந்து சராசரிக்கும் குறைவான வெப்பநிலை டிசம்பரில் பதிவானது. இது 15 ஆண்டுகளில் இல்லாத தாழ் வெப்பநிலை.

நேற்று குறைந்தபட்ச வெப்ப நிலை 3.3 டிகிரி செல்சியசாகவும் அதிகபட்ச வெப்பநிலை 15.2 டிகிரி செல்சியசாகவும் இருந்தது.

பொதுவாக 10 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் வெப்ப அளவு குறையும் போது குளிர் அலை என்று அறிவிக்கப்படும்.

குறைந்தபட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியசுக்கும் கீழ் குறையும் போது 'கடும் குளிர் அலை' என்று அறிவிக்கப்படும்.

டெல்லியில் கடந்த மாதத்தில் மட்டும் 8 முறை குளிர் அலை வீசியது.

1965ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 9 குளிர் அலை வீசியதுதான் இதுவரை பதிவானதில் மிக அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிடுகிறது.

குறிப்புச் சொற்கள்