ராமர் சிலை சேதம்: ஆந்திர தலைவர்கள் கண்டனம்

ராமர் சிலை சேதம்: ஆந்திர தலைவர்கள் கண்டனம்

1 mins read
eecfe0e4-d90b-4bab-a5c0-995469153b9f
-

அம­ரா­வதி: ஆந்­தி­ரா­வில் ராமர் சிலை சேதப்­ப­டுத்­தப்­பட்­ட­தற்கு பல்­வேறு அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர். இச்­சம்­ப­வத்­தின் பின்­ன­ணி­யில் உள்­ள­வர்­களை உட­ன­டி­யா­கக் கைது செய்­ய­வேண்­டும் என­வும் அவர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

விஜ­ய­ந­கர் பகு­தி­யில் உள்ள 400 ஆண்­டு­கள் பழைமை வாய்ந்த ராம­தீர்த்­தக் கோவி­லுக்­குள் நுழைந்து சிலர் அங்­கி­ருந்த ராமர் சிலை­யைச் சேதப்­ப­டுத்தி உள்­ள­னர். சிலை­யின் தலை­யைத் தனியே வெட்டி எடுத்­துச் சென்று அரு­கில் உள்ள வயல்­வெ­ளி­யில் வீசிச் சென்­றுள்­ள­னர்.

இது­கு­றித்­துக் கருத்து தெரி­வித்­துள்ள பிர­பல தெலுங்கு நடி­க­ரும் ஜன­சேனா கட்­சித் தலை­வ­ரு­மான பவன் கல்­யாண், நடப்பு ஆட்­சி­யில் ஏற்­கெ­னவே 2 கோவில்­கள் சமூக விரோ­தி­க­ளால் சூறை­யா­டப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இது தொடர்­பாக அரசு எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. அந்­தர்­வேதி லட்­சுமி நர­சிம்­மர் கோவி­லின் தேர், தீயிட்டு எரிக்­கப்­பட்­டது. இது­வரை ஒரு­வ­ரும் கைது செய்­யப்­பட வில்லை," என அவர் கூறியுள்ளார்.

கடந்த 19 மாதங்­களில் இந்­துக் கோவில்­கள் மீது மட்­டும் 120 தாக்கு­தல்­கள் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக முன்­னாள் முதல்­வர் சந்­தி­ர­பாபு நாயுடு தெரி­வித்­துள்­ளார்.

இத்­த­கைய தாக்­கு­தல்­க­ளைக் கண்­டிக்­கா­ம­லும் குற்­ற­வா­ளி­களைக் கைது செய்ய உத்­த­ர­வி­டா­மல் முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி வேடிக்கை பார்ப்­ப­தும் கண்­ட­னத்­துக்­கு­ரி­யது என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.