இணையத்தில் ஒரே நாளில் ரூ.75 கோடி உணவு விற்பனை

இணையத்தில் ஒரே நாளில் ரூ.75 கோடி உணவு விற்பனை

2 mins read
f33a7b59-0dbd-4ec0-b8c9-7f7d0a9744be
படம்: ஊடகம் -

புத்­தாண்டு தினத்திற்கு முதல் நாளில் இந்­தி­யா­ முழுவதும் இணை­யம் மூலம் ஒரே நாளில் 75 கோடி ரூபாய்க்கு உணவு விற்பனை நடந்­துள்­ளது. இதற்கு முன் நடந் திராத சாதனை விற்பனை இது என கூறப்படுகிறது. ஏரா­ள­மான 'ஆர்­டர்'கள் வந்து குவிந்­த­தால் விநி­யோ­கிக்க முடி­யாத அள­வுக்கு உண­வுக்­கும் விநி­யோ­கப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் பற்­றாக்­குறை ஏற்­பட்­டது.

புத்­தாண்­டுக் கொண்­டாட்­டத்தை முன்­னிட்டு அதி­க­பட்­ச­மாக ஸ்விகி இணைய விநி­யோக நிறு­வ­னத்­திற்கு நிமி­டத்­திற்கு 5,500 'ஆர்­டர்'­களும் மற்­றொரு நிறு­வ­ன­மான ஸோ மேட்­டோ­விற்கு 4,254 'ஆர்­டர்'­களும் குவிந்­தன. ஒட்­டு­மொத்­த­மாக இரு நிறு­வ­னங்களுக்கும் சரா­ச­ரி­யாக நிமி­டத்­திற்கு 4,000 'ஆர்­டர்­'கள் வந்­த­தாகச் சொல்­லப்­ப­டு­கிறது.

குறிப்­பாக, பெரு­ந­க­ரங்­க­ளைக் காட்­டி­லும் சிறு மற்­றும் குறு நக­ரங்­களில் வழக்­கத்­திற்கு மாறாக அதி­க­ள­வில் 'ஆர்­டர்' வந்­த­தா­க­வும் ஸ்வி­கி­யின் வட்­டா­ரம் தெரி­வித்­துள்­ளது. அதன் எதி­ரொ­லி­யாக பல உண­வ­கங்­களில் உணவு காலி­யா­கி­விட்­ட­தா­க­வும் அத­னால் உணவு வகைகளை போது­மான அள­வுக்கு விநியோகம் செய்யமுடி­ய­வில்லை என­வும் வருந்­து­கின்­ற­னர் இந்த நிறுவ­னங்­க­ளின் முத­லா­ளி­கள்.

எனவே இனி வரும் காலங் களில் இது­போன்ற பெரிய வர்த்தக நாட்­க­ளுக்­கு முன்­கூட்­டியே தயா­ராக இருக்­கப்­போ­வ­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

"புத்­தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பான மொத்த வியாபாரம் மட்­டும் 75 கோடி ரூபாய் அளவுக்கு நடந்­துள்­ளது. அனைத்து உண­வ­கங்­க­ளி­லும் ஆர்­ட­ருக்­கான உண­வு­கள் தடை­யின்றி கிடைத்­தி­ருந்­தால் 100 கோடி ரூபாயை அன்­றைய நாளில் எட்­டி­யி­ருப்­போம்," என தெரி­ வித்­துள்­ளார் ஸோமேட்டோ நிறு­வ­னத்­தின் தலை­மைச் செயல் அதி­காரி தீபிந்­தர் கோயல். உண­வ­க உரி­மை­யா­ளர்­கள் தங்­க­ளது வர்த்­த­கத்­திற்கு பக்­க­ப­ல­மாக இருந்­த­தா­க­வும் இந்­நி­று­வ­னங்­கள் கூறின. அதே நேரம், உணவு விநியோகம் தொடர்­பான புகா­ரும் குறை­வாக இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.