புத்தாண்டில் ரஜினியாக மாறி ஆட்டம் போட்ட டேவிட் வார்னர்

புத்தாண்டில் ரஜினியாக மாறி ஆட்டம் போட்ட டேவிட் வார்னர்

1 mins read
605be29b-706d-41ee-8c5b-737e5cddb94d
படம்: இன்ஸ்டகிராம் -

இந்­திய திரைப்­பட நடி­கர்­கள் மீது ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் வீரர் டேவிட் வார்­ன­ருக்கு மிகுந்த ஆர்­வம். ஐபி­எல் போட்­டி­களில் ஆடு­வ­தற்­காக இந்­தி­யா­வில் இருந்த காலத்­தில் நடி­கர்­களை மிக­வும் ரசித்­தார்.

குறிப்­பாக, ரஜி­னி­காந்தை அவ­ருக்கு மிக­வும் பிடிக்­கும். ஏற்­கெ­னவே எந்­தி­ரன் படத்­தில் ரஜினி நடித்த 'சிட்டி ரோபோ' போல நடித்­துக் காட்டி சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றிய காணொளி மிக­வும் பிர­ப­ல­மா­னது.

பாகு­ப­லி­யா­க­வும் அமீர்­கா­னா­க­வும் பல வேடங்­களில் தம்­மைப் பொருத்தி படங்­களை வெளி­யிட்டு வந்த வார்­னர், நேற்று முன்­தி­னம் புத்­தாண்டு தினத்­தில் மீண்­டும் ரஜி­னி­யாக மாறி­னார்.

'ரீஃபேஸ்' செயலி மூலம் தம்மை ரஜி­னி­யாக மாற்றி, 'தர்­பார்' படத்­தில் ரஜினி ஆடிக்­கொண்டு 'சும்மா கிழி' என்று பாடு­வதை காணொ­ளி­யா­கப் பதிவு செய்து இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­வேற்­றம் செய்­தார்.

ஏரா­ள­மான ரசி­கர்­கள் கேட்­டுக்­கொண்­ட­தால் ரஜி­னி­யின் பாடலை இணைத்து புத்­தாண்டு வாழ்த்­துத் தெரி­விப்­ப­தாக அந்­தப் பதி­வில் வார்­னர் குறிப்­பிட்டிருந்தார்.

இதனை ஏரா­ள­மான ரஜினி ரசி­கர்­கள் வர­வேற்று வார்­னரை வான­ளா­வப் புகழ்ந்து வரு­கின்­ற­னர்.