இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியையும் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை இந்திய அரசு வழங்கியுள்ளது.

‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கலாம் என மத்திய அரசு ஏற்கெனவே அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு மருந்துகளின் தரம் மற்றும் பரிசோதனை விவரங்களை ஆய்வு செய்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அவசரகாலப் பயன்பாட்டுக்குப் பரிந்துரைத்தது.

இந்த மருந்துகளை மக்களுக்கு செலுத்தும் பணி விரைவில் தொடங்க இருப்பதாகவும் முதற்கட்டமாக முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!