கர்நாடகாவில் குறைகிறது கொரோனா கிருமித்தொற்று

கர்நாடகாவில் குறைகிறது கொரோனா கிருமித்தொற்று

2 mins read

மத்தியப் பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மையங்களை மூடப்படுகின்றன

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு குறை­யத் தொடங்கி உள்­ளது. அங்கு நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக 810 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. கொவிட்-19 நோயில் இருந்து குண­ம­டை­வோர் எண்­ணிக்­கை­அதி­க­ரித்து வரு­கிறது.

தென் மாநி­லங்­க­ளைப் பொறுத்­த­வரை தமி­ழ­கத்­தில்தான் கொரோனா கிரு­மித்­தொற்று தாக்­கம் அதி­க­மாக இருந்­தது. இந்­நி­லை­யில் அங்கு புது நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை வேக­மாக சரிந்து வரு­கிறது.

கேர­ளா­வில் முன்பு குறை­வாக இருந்த நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை தற்­போது அதி­க­ரித்து வரு­கிறது. இந்­நி­லை­யில் கர்­நா­ட­கா­வில் நேற்று முன்­தி­னம் கொவிட்-19 நோய்க்கு மேலும் எட்டு பேர் பலி­யாகி உள்­ள­னர்.

இதை­ய­டுத்து அங்கு பலி­யா­னோ­ரின் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை 12,107ஆக உள்­ளது. பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 921,938 என்­றும் இது­வரை 898,919 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர் என்­றும் அம்­மா­நில சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

தற்­போது 10,893 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். கடந்த நாட்­களை விட தற்­போது கிரு­மிப் பர­வல் குறைந்­தி­ருப்­ப­தாக சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே மத்­தி­யப் பிர­தே­சத்­தில் கொரோனா சிகிச்சை மையங்­களை மூட அம்­மா­நில அரசு உத்­த­ர­விட்­டு­ள்ளது. கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­ததை அடுத்து அரசு இம்­மு­டி­வுக்கு வந்­தி­ருப்­ப­தாக தெரிய வந்­துள்­ளது.

கிரு­மித்­தொற்று பாதிப்பு உச்­சத்­தில் இருந்த போது மத்­தி­யப்­பி­ர­தே­சம் முழு­வ­தும் 225 சிகிச்சை மையங்­கள் திறக்­கப்­பட்­டன. பள்ளி, கல்­லூ­ரி­கள் கூட சிகிச்சை மையங்­க­ளாக மாற்­றப்­பட்­டன.

இந்­நி­லை­யில் அம்­மா­நில அரசு மேற்­கொண்ட பல்­வேறு நட­வ­டிக்­கை­களை அடுத்து கிருமித்­தொற்­றுப் பர­வல் தற்­போது கட்­டுக்­குள் வந்­துள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

எனவே தலை­ந­கர் போபாலைத் தவிர மற்ற மாவட்­டங்­களில் உள்ள சிகிச்சை மையங்­கள் மூடப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லை­யில் இந்­தி­யா­வில் ஞாயிற்­றுக்­கி­ழமை ஒரே நாளில் புதி­தாக 16,505 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது.

கடந்த சில தினங்­க­ளாக புதி­தாக பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை 20 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மாக இருந்து வந்த நிலை­யில், தற்­போது அந்த எண்­ணிக்கை 20 ஆயி­ரத்­துக்­கும் குறை­வாக பதிவாகி வருகிறது.

மேலும், வாராந்­திர பலி எண்­ணிக்­கை­யா­னது 30 வாரங்­க­ளுக்­குப் பிறகு இரண்­டா­யி­ரத்­துக்­கும் குறை­வா­கப் பதி­வாகி உள்­ளது. கடந்த ஏழு நாட்­களில் கிரு­மித்­தொற்று சம்­பந்­தப்­பட்ட உயி­ரி­ழப்­பு­கள் 2,000க்கும் குறை­வாக உள்­ள­தாக சுகா­தார அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்­பிட்­டுள்­ளது.