புதுடெல்லி: கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி 950 கிலோ கஞ்சாவைக் கடத்த முயன்ற இருவர் டெல்லியில் கைதாகினர்.
கடத்தலுக்குப் பயன்படுத்த இருந்த வாகனத்தில் அரசு தரும் 'கொரோனா பணி'க்காக என்ற ஸ்டிக்கரை அவர்கள் ஒட்டியிருந்தனர். இந்நிலையில் கஞ்சா கடத்தல் குறித்து கிடைத்த தகவலை அடுத்து போலிசார் இருவரும் தங்கியிருந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போது இருவரும் சிக்கினர்.

