சட்டங்களை திரும்பப்பெற முடியாது: மத்திய அரசு பிடிவாதம்

சட்டங்களை திரும்பப்பெற முடியாது: மத்திய அரசு பிடிவாதம்

2 mins read
97a05617-a14e-4a94-a6ba-2d14580a7463
டெல்லி போராட்டத்தில் பங்கேற்க ஹரியானா மாநிலத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டவர்களைக் கலைக்க போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: வேளாண் சட்­டங்­களை திரும்­பப் பெற இய­லாது என மத்­திய அரசு திட்­ட­வட்­ட­மாக கூறி­யுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நேற்று இரு­த­ரப்­புக்­கும் இடையே நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யில் சுமூக முடிவு எட்­டப்­ப­ட­வில்லை. எனவே வரும் 8ஆம் தேதி மீண்டும் பேச்­சு­வார்த்தை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் கூறியுள்ளனர். புதிய வேளாண் சட்­டங்­களை எதிர்த்து ஆயி­ரக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் ஒன்­று­கூடி டெல்­லி­யில் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். டெல்லி உள்­ளிட்ட வட மாநி­லங்­களில் தற்­போது கடுங்­கு­ளிர் நிலவி வரு­கிறது.

மேலும் கடந்த இரு தினங்­க­ளாக மழை­யும் பெய்­தது. ஆனால் விவ­சா­யி­கள் சட்டை கூட அணி­யா­மல் போராட்­டக் களத்­தில் உள்­ள­னர்.

பேச்­சு­வார்த்தை மூலம் தங்­கள் பிரச்­சி­னைக்­குத் தீர்வு கிடைக்­கா­விட்­டால் புது வேளாண் சட்­டங்­க­ளின் நகல்­களை எரிக்­கப் போவ­தாக அவர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர். இந்­தப் போராட்­டம் வரும் 13ஆம் தேதி நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் போராட்­டக் களத்­தில் இருந்த மேலும் மூன்று விவ­சா­யி­கள் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இது­வரை 60க்கும் மேற்­பட்ட விவ­சா­யி­கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக விவ­சாய சங்­கப் பிர­தி­நி­தி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் தினந்­தோ­றும் டெல்லி நோக்­கிச் செல்­லும் நிலை­யில், ஹரி­யா­னா­வில் விவ­சா­யி­கள் மீது கண்­ணீர்ப் புகை குண்டு வீசப்­பட்­டது.

டெல்லி நோக்கி விவ­சா­யி­கள் பேர­ணி­யா­கச் செல்ல முயன்ற போது ரிவாரி மாவட்ட போலி­சார் தடுத்து நிறுத்­தி­னர். அப்­போது தடுப்பு வேலி­க­ளைத் தள்­ளி­விட்டு விவ­சா­யி­கள் முன்­னேற முயன்ற போது போலி­சார் அவர்­க­ளைக் கலைக்க கண்­ணீர்ப் புகை குண்­டு­களை வீசி­னர்.

இதற்­கி­டையே டெல்லி போராட்­டக் களத்­தில் உள்ள விவ­சா­யி­க­ளின் சோர்வை நீக்க அவ்­வப்­போது இசை, நடன நிகழ்ச்­சி­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. அந்த வகை­யில் தற்­போது பெண்­கள் பங்­கேற்­கும் கபடி போட்­டி நடைபெற உள்ளது.