நீரின் மீது ஊர்ந்துசெல்லும் விமானச் சேவை; இந்தியாவில் விரிவு

நீரின் மீது ஊர்ந்துசெல்லும் விமானச் சேவை; இந்தியாவில் விரிவு

1 mins read
1e6512ad-2b18-4d3c-90fc-8b54b6f65229
-

இந்தியாவின் உள்நாட்டு இணைப்புகளையும் சுற்றுலாத் துறையையும் வளர்ப்பதற்காக அந்நாட்டின் அரசாங்கம், நீரின்மீது ஊர்ந்து வரும் விமான சேவைகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

'சீபிளேன்' எனப்படும் விமானங்களுக்கு விமான நிலையங்களும் ஓடுபாதைகளும் தேவைப்படாததால் அவை மேலே ஏறுவதற்காகவும் இறங்குவதற்காகவும் நிர்நிலைகளைப் பயன்படுத்தும். விரைவான, சிரமமற்ற பயணங்களுக்கு வசதி தரும் இந்த 'சீபிளேன்' சேவைகள் இந்தியப் பயணத்துறையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று துறைமுகம், கப்பல் மற்றும் நீர்நிலைகளுக்கான அமைச்சு தெரிவித்தது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு அக்டோபரின்போது அகமதாபாத்தில் கேவட்யாவுக்கும் சபர்பமதி ஆற்றுக்கும் இடையே 'சீபிளேன்' சேவையைத் தொடங்கி வைத்த நிகழ்வு இத்தகைய விமானச் சேவைகளுக்கானத் திட்டத்திற்கு உந்துதல் அளித்துள்ளது.