தேர்தலில் வெளிநாடு வாழ் - இந்தியர்கள் வாக்களிக்க முடியும்

புது­டெல்லி: விரை­வில் நடை­பெற உள்ள ஐந்து மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல்­களில் வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் தபால் மூலம் வாக்­க­ளிக்க வெளி­யு­ற­வுத்­துறை ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. இதை­ய­டுத்து தேர்­தல் விதி­மு­றை­களில் இதற்­கான திருத்­தத்தை மேற்­கொள்ள வேண்­டும் என்று மத்­திய சட்­டத்­து­றை­யைக் கேட்­டுக் கொண்­டுள்­ளது தேர்­தல் ஆணை­யம்.

இது தொடர்­பாக கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் மத்­திய சட்­டத்­து­றைக்கு கடி­தம் அனுப்பி இருந்­தது தேர்­தல் ஆணை­யம். அதில், வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­களும் தேர்­த­லில் வாக்­க­ளிக்­கும் வித­மாக தேர்­தல் விதி­மு­றை­களில் திருத்­தம் மேற்­கொள்ள வேண்­டும் என குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இதை­ய­டுத்து இத்­திட்­டத்­துக்கு வெளி­யு­ற­வுத்­து­றை­யின் ஒப்­பு­த­லும் கோரப்­பட்­டது.

இந்­நி­லை­யில், தேர்­தல் ஆணை­யம் முன்­வைத்த கோரிக்­கையை வெளி­யு­றவு அமைச்சு ஏற்­றுக் கொண்­டுள்­ளது. இந்­தத் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­த­லாம் என அந்த அமைச்சு அண்­மை­யில் தேர்­தல் ஆணை­யத்­துக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கம், மேற்கு வங்­கம், கேரளா உள்­ளிட்ட ஐந்து மாநி­லங்­களில் விரை­வில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இதற்­கான ஏற்­பா­டு­களை தேர்­தல் ஆணை­யம் செய்து வரு­கிறது. இம்­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்த சுமார் 117,000 பேர் தற்­போது வெளி­நா­டு­களில் வசித்­தா­லும், வாக்­கா­ளர்­க­ளா­கப் பதிவு செய்­துள்­ள­னர். இவர்­கள் தேர்­த­லில் வாக்­க­ளிக்க வேண்­டும் எனில் தேர்­தல் விதி­மு­றை­களில் திருத்­தம் செய்­யப்­பட வேண்­டும் என சட்ட வல்­லு­நர்­கள் தெரி­வித்­த­னர். இதை­ய­டுத்து வெளி­யு­றவு மற்­றும் சட்ட அமைச்­சு­களை தேர்­தல் ஆணை­யம் தொடர்புகொண்­டது.

வெளி­யு­றவு அமைச்சு தேர்­தல் ஆணை­யத்­தின் திட்­டத்­துக்கு ஒப்­பு­தல் அளித்­துள்ள நிலை­யில், சட்­டத்­து­றை­யும் இத்­திட்­டத்தை ஏற்­றுக்கொண்­டால், வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் தபால் மூலம் வாக்­க­ளிக்­கும் நடை­மு­றையை செயல்­ப­டுத்த தேர்­தல் ஆணை­யம் தயா­ராகிவிடும் என ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!