உத்தரப் பிரதேசத்தில் 50 வயது பெண் பாலியல் பலாத்காரம்

உத்தரப் பிரதேசத்தில் 50 வயது பெண் பாலியல் பலாத்காரம்

1 mins read
8c4bd76e-cac0-472c-921c-aa413e2e7a1d
-

இந்தியாவின் மேற்கு உத்தரப் பிரதேச மாநிலத்தில் 50 வயது பெண், குண்டர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு கொல்லப்பட்டார். இதற்குக் காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்செயலை போலி மந்திரவாதி ஒருவரும் அவரது சீடர்கள் இருவரும் செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

உயிரிழந்த அந்தப் பெண்ணின் உடலை மூடி மறைத்திருக்கும் துணியின் கீழ்ப்பாகத்தில் ரத்தக் கரை இருந்ததையும் அவரது கால்களில் ஒன்று உடைந்த நிலையில் இருந்ததையும் ஊடகங்கள் வெளியிட்ட படங்கள் காட்டின. அந்த மந்திரவாதிகள் நடத்தி வந்த கோயில் ஒன்றுக்கு அந்தப் பெண் அடிக்கடி செல்வதாக அவரது மகன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.