இந்தியாவில் உலகின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு ரயில் சேவை

1 mins read
8d83c85f-04d2-4b53-bc31-0727293bff99
-

உல­கின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு ரயில் போக்­கு­வ­ரத்தை (படம்) இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி நேற்று தொடங்கி வைத்­தார்.

அட்­டலி-கிஷன்­கர்க் வரை­யி­லான மின்­சா­ரத்­தால் இயங்­கும் இந்த 1.5 கிலோ மீட்­டர் நீள இரட்டை அடுக்கு ரயில் மூலம் கூடு­த­லாக 25 டன் சரக்­கைக் கொண்டு செல்ல முடி­யும். இது தற்­போ­தைய இந்­திய ரயில்வே போக்­கு­வ­ரத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், நான்கு மடங்கு எண்ணிக்கையில் கொல்கலன்களை ஏற்­றிச் செல்­லும் திறன் படைத்தது.

மேற்கு பிரத்­தியேக சரக்­குப் பாதை­யின் 306 கிலோ மீட்­டர் தூர ரெவாரி- மதார் பிரி­வை­யும் நேற்று மோடி தொடங்கி வைத்­தார். இச்­சே­வை­களை நாட்­டுக்கு அர்ப்­ப­ணித்த மோடி, இதனால் ராஜஸ்­தான், ஹரி­யானா விவ­சா­யி­க­ளுக்குப் புதிய வாய்ப்­பு­கள் பெரு­கும் என்­றார்.

ரெவாரி மதார் பிரி­வில் புதி­தாக அமைக்­கப்­பட்ட ஒன்­பது புதிய சரக்கு ரயில் நிலை­யங்­கள் உள்­ளன. இந்­தப் பிரிவு திறக்­கப்­ப­டு­வ­தன் மூலம், ராஜஸ்­தான், ஹரி­யா­னா­வில் உள்ள தொழிற்­சா­லை­க­ளுக்­குப் பெரும் பயன் கிடைக்­கும். கத்து­வா­சில் உள்ள கன்­கார் சரக்­குப் கொல்கலன் முனை­யத்தை நன்கு பயன்­ப­டுத்­திக்­கொள்ள வழி ஏற்­பட்­டுள்­ளது. குஜ­ராத் துறை­முகங்­க­ளு­ட­னான இணைப்பை இது உறுதி செய்­யும்.

இந்­தப் பிரிவு தொடங்­கப்­ப­டு­வ­தன் மூலம், மேற்கு, கிழக்கு சரக்­குப் பாதை­கள் இடையே தடை­யற்ற இணைப்பு ஏற்­படும். இந்­நி­கழ்ச்­சி­யில், ராஜஸ்­தான், ஹரி­யானா மாநில ஆளு­நர்­கள், முதல்­வர்­கள், மத்­திய அமைச்­சர் பியூஷ் கோயல் ஆகி­யோர் கலந்துகொண்­ட­னர்.