டிராக்டர் பேரணி ஒத்திகை: தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்

டிராக்டர் பேரணி ஒத்திகை: தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்

2 mins read
2994224b-77bf-4d8e-aa74-2af3f663682a
டெல்லி டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகளில் ஒருவர். படம்: ராய்ட்டர்ஸ் -

புதிய வேளாண் சட்­டங்­களை எதிர்த்­துப் போராடி வரும் விவ­சா­யி­கள் நேற்று டிராக்­டர் பேர­ணிக்­கான ஒத்­தி­கை­யில் ஈடு­பட்­ட­னர். இதில் 2,500 டிராக்டர்கள் பங்கேற்றன.

டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடந்தது.

இந்தப் பேரணியையொட்டி டெல்லி, ஹரியானாவில் போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இரு­த­ரப்­புக்­கும் இடை­யி­லான எட்டாவது சுற்றுப் பேச்­சு­வார்த்தை இன்று நடை­பெற உள்­ளது.

வேளாண் சட்­டங்­களை திரும்­பப் பெற முடி­யாது என்று மத்­திய அரசு திட்­ட­வட்­ட­மா­கக் கூறி வரு­கிறது. இதை ஏற்க மறுத்­துள்ள விவ­சா­யி­கள் ஓராண்டு ஆனா­லும் தங்­க­ளது கோரிக்­கை­கள் ஏற்­கப்­படும் வரை போராட்­டம் நீடிக்­கும் எனத் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ரான மனுக்­கள் மீது வரும் 11ஆம் தேதி விசா­ரணை நடை­பெ­றும் என உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

டெல்­லி­யில் நிலவி வரும் கடுங்­கு­ளிர், மழைக்கு மத்­தி­யில் விவ­சா­யி­க­ளின் போராட்­டம் 40 நாள்­க­ளைக் கடந்­துள்­ளது. மோச­மான வானிலை கார­ண­மாக நேற்று முன்­தி­னம் நடை­பெற இருந்த டிராக்­டர் பேரணி கைவி­டப்­பட்­டது.

இந்­நி­லை­யில், டெல்­லிக்கு அருகே உள்ள காசிப்­பூர் பகு­தி­யில் நேற்று டிராக்­டர் பேர­ணிக்­கான ஒத்­திகை நடை­பெற்­றது. இதில் ஏரா­ள­மான விவ­சா­யி­கள் பங்­கேற்­ற­னர்.

இதற்­கி­டையே வேளாண் சீர்­திருத்­தங்­க­ளுக்­குப் பின்­னால் உள்ள உணர்­வு­களை போராட்­டக் களத்­தில் உள்ள விவ­சா­யி­கள் உணர வேண்­டும் என மத்­திய வேளாண் அமைச்­சர் நரேந்­திர சிங் தோமர் கூறி­யுள்­ளார். விவ­சா­யி­க­ளின் நலன்­க­ளைப் பாது­காக்க அரசு உறுதி பூண்­டுள்­ளது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"என­வே­தான் வேளாண் சட்­டங்­களை ஆத­ரிக்­கும் விவ­சா­யி­க­ளு­டன் மட்­டு­மல்­லா­மல் எதிர்ப்பு தெரி­விப்­ப­வர்­க­ளி­ட­மும் மத்­திய அரசு பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றோம். ஆக்­க­பூர்­வ­மான பேச்­சு­வார்த்தை மூலம் நல்ல முடிவு எட்­டப்­படும் என மத்­திய அரசு உறு­தி­யாக நம்­பு­கிறது," என்­றார் அமைச்­சர் தோமர்.