தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'இந்தியாவில் கருச்சிதைவுகளுக்கு நச்சுக்காற்று காரணம்'

2 mins read
1e99cea2-3f9f-4feb-b4f9-1a8220ff6086
டெல்லியில் காற்று மாசுக்கிடையே நடந்து செல்லும் கர்ப்பிணி. கோப்புப்படம்: ஏஎஃப்பி -

இந்தியாவிலும் இதர தெற்கு ஆசிய நாடுகளிலும் பெருமளவு கருச்சிதைவுகள் ஏற்படுவதற்கும் நச்சுக் காற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

லான்சட் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெற்கு ஆசியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 350,000 கருச்சிதைவுகள் ஏற்படுவதாகவும் அவற்றுக்கு காற்றுத் தூய்மைக்கேடு முக்கிய காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2000க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த கருச் சிதைவுகளுக்கு காற்றுத்தூய்மைக்கேடு ஏழு விழுக்காடு பங்கை வகிக்கிறது.

உலகம் முழுவதும் ஒப்பிட்டால் தெற்கு ஆசியாவில்தான் கருச் சிதைவு விகிதம் அதிகமாக காணப்படுகிறது.

உலகிலேயே தெற்கு ஆசியாவில்தான் காற்றின் தரமும் மோசமாக உள்ளது.

"காற்றின் தரத்தை கட்டிக்காக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை எங்களுடைய கண்டுபிடிப்பு வலியுறுத்துகிறது," என்று முன்னணி ஆய்வாளர்களில் ஒருவரான பெகிங் பல்கலைக்கழகத்தின் தாவோ ஸுவே தெரிவித்தார்.

இந்தியாவில் மட்டும் அங்குள்ள மோசமான காற்று, 1.67 மில்லியன் மரணங்களுக்கு வழி வகுத்துள்ளன. இது, 2019ஆம் ஆண்டின் மொத்த மரண எண்ணிக்கையில் 18 விழுக்காடாகும். 2017ஆம் ஆண்டின் 1.24 மரணங்களுடன் ஒப்பிடு கையில் இது அதிகம்.

சுவாசக் கோளாறு, நுரையீரல் புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, நீரிழிவு, குழந்தை பிறப்பு கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு காற்றுத் தூய்மைக்கேடு முக்கிய காரணம் என்று பகுப்பாய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

வியாழக்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெற்கு ஆசி யாவில் உள்ள 34,197 அன்னை யர்களின் புள்ளிவிவரங்களை சீனா ஆய்வாளர் குழு ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதில் குறைந்தது ஒருவருக்கு கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவைச் சேர்ந்த வர்கள். எஞ்சியவர்கள் பாகிஸ்தான் மற்றும் பங்ளாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்