ஒரே மேடையில் 2 காதலிகளை மணந்த இளையர்

ஒரே மேடையில் 2 காதலிகளை மணந்த இளையர்

2 mins read
662f7e71-974b-478f-b993-e4c5089a5b07
இரு பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்ட சத்தீஸ்கர் மாநில இளைஞர். காணொளிப்படம்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

ராய்ப்­பூர்: இந்­தி­யா­வின் சத்­தீஸ்­கர் மாநி­லத்­தில் வழக்­கத்­திற்கு மாறாக மூன்று மனம் இணைந்த திரு­ம­ணம் நடை­பெற்­றுள்­ளது.

ஜகக்­தால்­பூர் மாவட்­டத்­தில் உள்ள இளை­ஞர் ஒரு­வர், ஒரே சம­யத்­தில் இரண்டு காத­லிக்­கும் தாலியை கட்டி திரு­ம­ணம் செய்து கொண்­டுள்­ளார்.

தன்­னைக் காத­லித்த ஹசினா, சுந்தரி ஆகிய இரு­வ­ரை­யும் அவர்­க­ளு­டைய சம்­ம­தத்­து­டன் சந்து மெள­ரியா என்ற அந்த விவ­சாய இளைஞர் மணம் புரிந்தார்.

ஒரே மண்­டபத்­தில், ஒரே மேடை­யில், ஒரே மாதிரி­யான சடங்­கு­க­ளு­டன் ஜன­வரி 3ஆம் தேதி இந்­தத் திரு­ம­ணம் நடை­பெற்­றது. இதில் அக்­கம்­பக்­கத்­தைச் சேர்ந்த சுமார் 600 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

மாவோ­யிஸ்­டு­க­ளால் பாதிக்­கப்­பட்ட பஸ்தர் மாவட்­டத்­தில் உள்ள சிறு கிரா­மத்தைச் சேர்ந்த 21 வயது பழங்குடி பெண்ணான சுந்­தரி காஷ்­யாப்பிடம் சந்து மெள­ரியா மனதை பறிகொடுத்தார்.

இவர்­க­ளது காதல் தொலை­பேசி வழி­யாக பேசிப் பேசியே பெருகி வளர்ந்­தது. இரு­வ­ரும் திரு­ம­ணம் செய்­து­கொள்ள முடிவு செய்­த­னர்.

இந்த நிலையில் திரு­மண நிகழ்ச்சி ஒன்­றில் ஹசினா என்ற பெண்­ணைச் சந்­தித்த சந்து, மீண்­டும் காதல்வயப்பட்டார்.

ஆனால், ஏற்­கெ­னவே ஒரு பெண்­ணைக் காத­லித்து வரு­வதை ஹசி­னா­வி­டம் சந்து மனம் திறந்து ஒப்­புக்கொண்­டார். அதைப் பற்றி சற்றும் கவலைப்படாத ஹசினா, தன்­னை­யும் திரு­ம­ணம் செய்­து­கொள்ள ேவண்­டும் என்று சந்­து­வி­டம் வற்­பு­றுத்­தி­னார்.

இதற்கிடையே மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து நிலைமையை புரிந்துகொண்டனர்.

பின்னர் மூவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். ஒரு வருட காலம் மூவரும் ஒரே வீட்­டில் வாழ்க்­கையை ஓட்­டிய நிலையில், ஊர் பெரியவர்கள் கேள்வி எழுப்­பி­ய­தால் இவர்­க­ளுக்கு திரு­ம­ணம் செய்து வைக்க மூன்று வீட்­டா­ரும் சம்­ம­தித்­த­னர்.

மூவ­ரின் பெயர்­களும் அச்­சி­டப்­பட்டு திரு­மண வர­வேற்பு பத்­தி­ரிகை ஊர் முழு­வ­தும் விநி­யோ­கிக்­கப்­பட்­டது.

பின்­னர் ஊரார் முன்­னி­லை­யில் மூவ­ரின் திரு­ம­ணம் நடைபெற்றது.

தன்­னைக் காத­லித்த இரு பெண்­க­ளுக்கும் துரோகம் ெசய்ய விரும்­ப­வில்லை என்று இந்­துஸ்­தான் டைம்­சுக்கு அளித்த பேட்­டி­யில் சந்து தெரி­வித்­தார்.

அவ­ரைத் திரு­ம­ணம் செய்த இரு பெண்­களும் கண­வர் தங்­களை சரிசமமாக நல்ல முறை­யில் கவ­னித்­துக்கொள்­வ­தாக கூறி­யுள்­ள­னர்.