இந்திய வீரர்களுக்கு எதிராக இனவாத தூற்று; மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் மன்றம்

இந்­தி­யா­வுக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­கும் இடையே கிரிக்­கெட் டெஸ்ட் போட்டி நடை­பெற்று வரு­கிறது. சிட்னி கிரிக்­கெட் மைதா­னத்­தில் நடை­பெற்று வரும் இப்­போட்­டி­யில், தொடர்ந்து இரண்டு நாட்­க­ளாக இந்­திய வீரர்­க­ளுக்கு எதி­ராக ஆஸ்­தி­ரே­லிய ரசி­கர்­கள் சிலர் இனரீதியாக தூற்றியது தெரிய வந்­துள்­ளது.

மூன்­றா­வது டெஸ்ட்­டின் நான்­கா­வது நாள் ஆட்­டம் நேற்று நடை­பெற்­ற­போது தங்­க­ளுக்கு எதி­ராக ஆஸ்­தி­ரே­லிய ரசி­கர்­கள் சிலர் இனரீதியாக தூற்றி இழி­வு­ப­டுத்­தி­ய­தாக நடு­வ­ரி­டம் இந்­திய வீரர் ரகானே முறை­யிட்­டார்.

இந்­திய வீரர் சிராஜ் தொடர்ந்து இரண்டு முறை வீசிய பந்தை ஆஸ்­தி­ரே­லி­யா­வின் கேம­ரன் கிரீன் சிக்­சர் அடித்­ததை அடுத்து ரசி­கர்­க­ளுக்­கான இருக்­கை­களில் அமர்ந்­தி­ருந்த சில ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் சிரா­ஜைத் தூற்­றும் வகை­யில் இன­வா­தக் கருத்­து­க­ளைத் தெரி­வித்­த­தாக மைதான அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த முறை­யற்ற செய­லைக் கண்­டித்து சிரா­ஜு­டன் சேர்ந்து இந்­திய வீரர்­கள் அனை­வ­ரும் மைதா­னத்­தின் நடு­வில் கூடி­னர்.

இத­னைத் தொடர்ந்து, ஆட்­டம் சிறிது நேரம் நிறுத்­தி­வைக்­கப்­பட, இந்­திய வீரர்­கள் செய்த புகார் தொடர்­பாக உட­ன­டி­யாக விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

இந்­திய வீரர்­க­ளுக்கு எதி­ராக இன­வாத தூற்றலில் ஈடுபட்ட ரசி­கர்­களை அடை­யா­ளம் கண்ட ஆஸ்­தி­ரே­லிய போலி­சார் அவர்­களை அரங்­கி­லி­ருந்து வெளி­யேற்­றி­னர். இதை­ய­டுத்து, ஆட்­டம் தொடர்ந்­தது.

இந்­நி­லை­யில், நடந்­த­தற்கு ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் மன்­றம் வருத்­தம் தெரி­வித்­துக்­கொண்­டது. ரசி­கர்­க­ளின் இழிசொற்­க­ளால் மனம் புண்­பட்ட இந்­திய வீரர்­க­ளி­டம் அது மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­டது.

“இன­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு நாங்­கள் கடும் கண்­ட­னத்­தைத் தெரி­விக்­கி­றோம்.

“அவ்­வாறு நடந்­து­கொள்­வோ­ருக்கு ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட்­டில் இட­மில்லை.

“இந்­திய வீரர்­கள் செய்­துள்ள புகார் தொடர்­பாக அனைத்­து­லக கிரிக்­கெட் மன்­றம் விசா­ரணை நடத்­து­கிறது.

“தவறு செய்­தோ­ரின் அடை­யா­ளம் உறுதி செய்­யப்­பட்­ட­தும் அவர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

“விளை­யாட்­ட­ரங்­கிற்­குள் வர அவர்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­ப­ட­லாம். அத்­து­டன், போலி­சி­ட­மும் புகார் செய்­யப்­ப­ட­லாம்,” என்று ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் மன்­றம் நேற்று தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!