குரோம்பேட்டையில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றும் வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என்று கூறி மீனாட்சி சுந்தரம் என்ற சமூக ஆர்வலர் கழிவுநீரில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லா வரம் நகராட்சிக்கு உட்பட்ட புதுவை நகர்ப் பகுதியில் வணிகர்கள் பலர் கடைகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம், நாளும் தீராத தலைவலியாக இருந்து வரும் இந்த கழிவுநீர் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணக் கோரி கழிவுநீர் மத்தியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, குரோம்பேட்டை நகர காவல்துறையினர் மீனாட்சி சுந்தரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நகராட்சி ஆணை யரும் துப்புரவு அலுவலர்களும் அவரது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதி கூறியதைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரம் போராட்டத்தைக் கைவிட்டார்.
இதுகுறித்து மீனாட்சி சுந்தரம் கூறுகையில், "இந்தப் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளன. மக்கள் அருகில் வசிக்கமுடியாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி அமைத்துள்ள கால்வாயில் இருந்து ெவளியாகும் கழிவுநீர் அருகிலுள்ள கடைகளுக்குள் செல்கிறது. அதேபோல் ஹோட்டல் களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இங்கு தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பலமுறை பல்லாவரம் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண் டும்," என வலியுறுத்தி உள்ளார்.
பல்லாவரம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிடக் ேகாரியும் சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக் கோரியும் கழிவுநீர் மத்தியில் தனி ஒருவராக அமர்ந்து போராட்டம் நடத்துகிறார் சமூக ஆர்வலர் மீனாட்சி. படம்: ஊடகம்

