குளிரில் சாலையோரம் உறங்கிய முதல்வர்

குளிரில் சாலையோரம் உறங்கிய முதல்வர்

2 mins read
ec5e9f50-326f-4b4f-9fff-29668196c381
படம்: ஊடகம் -

மார்­கழி மாத நடுங்­கும் குளி­ரி­லும் கொட்­டும் மழை­யி­லும் சாலை­யோ­ர­மாக படுத்­துத் தூங்கி தனது மூன்­றாம் நாள் போராட்­டத்­தைத் தொடர்ந்து வரு­கி­றார் புதுச்­சேரி முதல்­வர் நாரா­ய­ண­சாமி.

புதுச்­சேரி துணை நிலை ஆளு­நர் கிரண்­பே­டிக்கு எதி­ராக அவ­ரது ஆளு­நர் மாளிகை முன்­பாக இந்தப் போராட்டம் தொடர்ந்தது.

ஆளும் காங்­கி­ரஸ் அர­சுக்கு எதி­ரா­க­வும் மக்­கள் நலத்­திட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு முட்­டுக்­கட்­டை­யா­க­வும் புதுவை ஆளு­நர் கிரண்­பேடி செயல்­பட்டு வரு­கி­றார்.

எனவே, அவரைத் திரும்­பப் பெறும்­படி மத்திய அரசை வலி­யுறுத்தி, அம்­மா­நில முதல்­வர் நாரா­ய­ண­சாமி, அமைச்­சர்­கள், சட்­ட­மன்ற, நாடா­ளுன்ற உறுப்­பி­னர்­கள், காங்­கி­ரஸ் தலை­வர்­கள், நிர்­வா­கி­கள் தொடர்ந்து மூன்­றாம் நாளாக போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

புதுச்­சே­ரி­யில் ஆளு­நர் கிரண்­பேடி-முதல்­வர் நாரா­ய­ண­சாமி இடை­யே­யான மோதல் உச்­ச­க்கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலை­யில், ஏறக்­கு­றைய 300க்கும் மேற்­பட்ட துணை ராணு­வத்­தி­னர் போராட்­டக்­க­ளத்­தில் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முதல்வர் நாராயணசாமி, "கிரண்­பே­டியை திரும்­பப் பெறுங்­கள் என்­கிற கோரிக்கை பிர­த­மர் மோடி­யின் காது­களை எட்­டும் வரை இப்­போ­ராட்­டம் நீடிக்­கும்.

"கிரண்­பே­டியே திரும்­பிப் போ; நரேந்­திர மோடியே கிரண்­பே­டியை திரும்­பப் பெறு; புதுச்­சே­ரியை காப்­போம்! மீட்­போம் என்­கிற முழக்­கம் தொடர்ந்து ஒலிக்­கும்," என்றார்.

இதற்­கி­டையே ஆளு­நர் மாளி­கைக்கு ஐந்­த­டுக்கு பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது. மாளி­கை­யைச் சுற்றி அதி­ர­டிப்­படை போலி­சார் குவிக்­கப்­பட்டு சாலை­கள் சீல் வைக்­கப்­பட்­டுள்­ளன. போராட்­டப்­ப­கு­தி­யில் 144 தடை உத்­த­ரவு போடப்­பட்­டுள்ளதால் புது­வை­யில் அர­சி­யல் பதற்­றம் நீடித்து வரு­கிறது.

புதுச்­சேரி முதல்­வர் நாரா­ய­ண­சாமியும் (நீலப் போர்வையுடன்) அமைச்­சர்­களும் இர­வு நேரத்திலும் சாலை­யில் தூங்கி போராட்­டத்தைத் தொடர்ந்­த­னர்.

தொண்டர்களுக்கு பானி­பூரி, பூரி மசாலா, ஆம்லெட், அரை வேக்­காட்டு முட்டையுடன் உணவு பரி­மா­றப்­பட்­டது.