இலவச ஆடுகளை மக்களிடம் வழங்க தலா ரூ.2,000 லஞ்சம்; விசாரணைக்கு உத்தரவு

இலவச ஆடுகளை மக்களிடம் வழங்க தலா ரூ.2,000 லஞ்சம்; விசாரணைக்கு உத்தரவு

1 mins read
c9fafba1-b4cd-44f7-b6a3-85eaab18f770
ஊராட்சி செய­லர் சின்­ன­காளை, பணித்­தளப் பொறுப்­பா­ளர் முரு­கே­சன் ஆகிய இரு­வ­ரும் இலவச ஆடுகளை வழங்க ரூ.2,000 பணத்தை லஞ்சமாகப் பெறும் காட்சி வெளி யா­கி­யுள்­ளது. படம்: ஊடகம் -

: ஏழை மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் வகை­யில் இல­வ­ச­மாக ஆடு­களை வழங்­கும் திட்­டத்ைத ஆங்­காங்கே தமி ழக அரசு செயல்­ப­டுத்தி வரு­கிறது.

இது­போல், இத்­திட்­டத்­தின் கீழ் ஏறக்­கு­றைய 70 பய­னா­ளி­க­ளுக்கு ஆடு­களை பொறுப்பாளர்கள் வழங்­கி­ய­போது, தலா 2,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்­றுக்­கொண்டு ஆடு­களை வழங்­கி­யுள்­ள­னர்.

இந்­தக் காணொளி தற்­போது சமூக வலைத்­த­ளத்­தில் பரவி வருவ தைக் கண்டு மக்­கள் அதிர்ச்சி அடைந்­துள்ளனர்.

அத்­து­டன், இச்சம்பவம் தொடர்­பாக விசா­ரணை நடத்­த­வும் மாவட்ட அதி­கா­ரி­கள் உத்­த­ர­விட்­டுள்­ள­னர்.

புதுக்­கோட்டை மாவட்­டம், பொன்­ன­ம­ரா­வதி அரு­கே­யுள்­ளது உசி­லம்­பட்டி. இப்­ப­கு­தி­யைச் சேர்ந்த பய­னா­ளர்­க­ளுக்கு அர­சுத் திட்­டத்­தின் கீழ் இல­வ­ச­மாக ஆடு­கள் வழங்­க உள்­ள­தா­க­க் கூறி, கொன்­னை­யூ­ரில் உள்ள சந்­தைக்கு வரும் ­ப­டி­ பொறுப்பாளர்கள் அழைத்தனர்.

அதன்­படி, ஆடு­களை அழைத் துச் செல்ல வந்த 70 பேரி­ட­மும் ரூ.2,000 கொடுத்­தால் மட்­டுமே ஆடு­கள் வழங்­கப்­படும் எனக் கூறி யுள்­ள­னர் பொறுப்பாளர்கள். இதைக் ேகட்டு அதிர்ந்த மக்­கள், வேறு வழி­யின்றி பணத்­தைக் கொடுத்து ஆடு­களை அழைத்­துச் சென்­ற­னர்.