சுடச் சுடச் செய்திகள்

தடுப்பூசி விநியோகம் விரைவில் தொடங்கும்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி 16ஆம் தேதி தொடங்கப் படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நிலையில் புனே நகரிலிருந்து தடுப்பூசி விநி யோகம் அடுத்த சில நாட்களில் தொடங்குகிறது.

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய 2 மருந்து களைப் பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதில் கோவிஷீல்டு மருந்து இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல் கலைக்கழக்தின் கண்டுபிடிப் பாகும். இந்தத் தடுப்பூசி மருந்தை புனேவில் உள்ள ‘சீரம் இன்ஸ்டி டியூட்’ தயாரித்து வருகிறது.

கோவேக்சின் மருந்தை ஐதரா பாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த மருந்து விநியோகம் செய்ய சிறிது தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

இதனால் முதலாவதாக கோவி ஷீல்டு மருந்தை விநியோகிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வரு கின்றன.

மத்திய அரசுக்கும் ‘சீரம்’ நிறு வனத்துக்கும் இடையே மருந்தின் விலை தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது.

இதில் விலை நிர்ணயிக்கப் பட்டதும் உடனடியாக புனேவில் உள்ள கிடங்கிலிருந்து தடுப்பூசி மற்ற இடங்களுக்கு அனுப்பப் படும். மருந்துகள் குளிர்சாதன பெட்டியில் வைத்து அனுப்பப்படு கின்றன.

இதற்காக மும்பையைச் சேர்ந்த ‘கூல் எக்ஸ் கோல்டு செயின் லிமிடெட்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

முதலாவதாக 2 லட்சம் முறை போடக்கூடிய மருந்துகளை விநியோகம் செய்ய ‘சீரம்’ தயாராக உள்ளது. நிறுவனத்தில் இருந்து மருந்துகளை விமான நிலையம் கொண்டு செல்லும் வரை அதற்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுள்ளனர். எனவே மகாராஷ்டிரா போலிசார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

தடுப்பூசி மருந்தை பாட்டிலில் இருந்து திறந்ததும் 4 மணி நேரத்திற்குள் ஊசி போட வேண்டும். ஒரு புட்டிகளில் 10 பேருக்கான மருந்து இருக்கும்.

எனவே ஊசி போட 10 பேர் வந்ததற்குப் பிறகுதான் புட்டியைத் திறந்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon