தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை; உச்சநீதிமன்றம் உத்தரவு

1 mins read
c274645e-6c63-41ec-9166-5f500d1f1753
வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போரிடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் டெல்லி நோக்கி புறப்பட்ட அமிர்தசரஸ் விவசாயிகள். படம்: இபிஏ -

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் 48 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையில், போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முவைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அவற்றின் மீதான விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதிகள் குழுவை நியமிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
டெல்லிவிவசாயிபோராட்டம்