கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்

2 mins read
056c0d93-e273-48f9-901d-e6500685c7d8
கர்நாடக மாநிலத்தில் புதிதாக பதவியேற்ற ஏழு அமைச்சர்களுடன் நடுவில் கர்நாடக ஆளுநர் வஜூபாய் (இடமிருந்து நான்காவது), முதல்வர் எடியூரப்பா. படம்: ஊடகம் -

மிரட்டுபவர்களுக்குப் பதவியா?: முதல்வர் எடியூரப்பா மீது 'எம்எல்ஏ'க்கள் அதிருப்தி

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் நேற்று மேலும் ஏழு பேர் புதிய அமைச்­சர்­க­ளாக பத­வி­யேற்­றுக்­கொண்­ட­னர். ஆளு­நர் மாளி­கை­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் ஆளு­நர் வஜூ­பாய் வாலா புதிய அமைச்­சர்­க­ளுக்குப் பத­விப்­பி­ர­மா­ணம் செய்து வைத்­தார்.

எம்.எல்.ஏக்­கள் உமேஷ் கட்டி, அங்­கரா, முரு­கேஷ் நிரானி மற்­றும் அர­விந்த் லிம்­ப­வள்ளி ஆகி­யோ­ரும், எம்.எல்.சிக்­கள் சங்­கர், எம்.டி.பி.நாக­ராஜ் மற்­றும் யோகேஸ்­வர் ஆகி­யோ­ரும் நேற்று அமைச்­சர்­க­ளாக பத­வி­யேற்­றுக்­கொண்­ட­னர். இந்­நி­கழ்ச்­சி­யில் முதல்­வர் எடி­யூ­ரப்பா, அமைச்­சர்­கள், பாஜக தலை­வர்­கள் ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்.

2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் எடி­யூ­ரப்பா முதல்­வ­ரா­கப் பத­வி­யேற்­றுக்­கொண்­டது முதல் இது­வ­ரை­யி­லும் மூன்று முறை அங்கு அமைச்­ச­ரவை விரி­வாக்­கம் செய்து மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது. இப்­போது மூன்­றா­வது முறை­யாக அமைச்­சரவை விரி­வாக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து புதிய அமைச்­சர்­கள் பொறுப்­பேற்­றுக்­கொள்­ளும் நிலை­யில் அதி­ருப்­தி­யில் உள்ள பிற பாஜக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எடி­யூ­ரப்பா மீதான தங்­க­ளின் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

தற்­போது அமைச்­ச­ர­வை­யில் உள்­ள­வர்­களில் பெரும்­பா­லா­னோர் பெங்­க­ளூரு, பெலா­கவி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்கள் என்­றும் குறிப்­பிட்ட பகு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­களுக்கு தகுந்த அங்­கீ­கா­ரம் அளிக்­கப்­ப­ட­வில்லை என்­றும் பாஜக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் முதல்­வர் எடி­யூ­ரப்பா மீது குறை கூறி வரு­கின்­ற­னர்.

"தனக்கு மிரட்­ட­லாக இருப்­ப­வர்­க­ளின் வாயை அடைப்­ப­தற்­காக முதல்­வர் எடி­யூ­ரப்பா, தனது அமைச்­ச­ர­வை­யில் அவர்­க­ளுக்­குப் பதவி கொடுத்­துள்­ளார்," என்று விஜ­ய­புரா தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பச­ன­க­வுடா பாட்­டில் யாத்­னல் கூறி­யுள்­ளார். மேலும் அவர் கூறு­கை­யில், "கட்­சிக்­காக பாடுபட்டவர்களை முதல்­வர் கண்டு கொள்­ளா­மல் தன்னை மிரட்­டு­பவர்­க­ளுக்கு இடம் கொடுத்­துள்­ளார். இனி, அவ­ருக்­குக் கீழ் ஒரு­போதும் அமைச்­ச­ராக எனக்கு விருப்­ப­மில்லை. இது­போன்ற அர­சி­யல்­வாதி­க­ளின் அர­சி­யல் வாழ்க்கை நீண்ட நாள் நீடிக்­காது என்­பது உறுதி. கர்­நா­ட­கா­வில் நிச்­ச­யம் புதிய சகாப்­தம் பிறக்­கப்­போ­கிறது என்று பெங்­க­ளூ­ரில் நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டம் ஒன்­றில் திரு பச­ன­க­வுடா கூறி­யுள்­ளார்.