புதுடெல்லி: டெல்லியில் தடுப்பூசி போடும் பணி வாரத்தில் நான்கு நாட்கள் மேற்கொள்ளப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமையில் தடுப்பூசி போடப்படும். ஒரு வருடமாக கொரோனாவால் மக்கள் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர். இந்த தடுப்பூசி அவர்களுக்கு ஒரு நிம்மதியைத் தரும் என்று தான் நம்புவதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

