பசுவை கொன்றால் ஏழாண்டு சிறை

பெங்­க­ளூரு: பசு வதை­யைத் தடை செய்­வ­தற்­கான அவ­ச­ரச் சட்­டத்தை கர்­நா­டக அரசு பிறப்­பித்து உள்­ளது. அதற்கு ஆளு­நர் வஜு­பாய் வாலா ஒப்­பு­தல் வழங்கி உள்­ளார். இச்­சட்­டம் இன்று திங்­கட்­கி­ழமை முதல் நடப்­புக்கு வரு­வ­தாக கர்­நா­டக அரசு தெரி­வித்து உள்­ளது.

இந்­தச் சட்­டத்­தின்­படி பசு மாடுகளைக் கொல்­வது குற்­ற­மா­கும். வயது முதிர்ந்த மாடு­களை விவ­சா­யி­கள் வளர்க்க இய­லா­மல் போனால் அவற்றை கோசா­லை­யில் விட்­டு­விட வேண்­டும்.

சட்­டத்தை மீறி பசு­மா­டு­க­ளைக் கொல்­வோ­ருக்கு ஏழாண்டு வரை­யி­லான சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும். ரூ.50,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­படும்.பசு வதைச் சட்­டம் அம­லுக்கு வந்­தா­லும் மாட்­டி­றைச்சி உண்­ணத் தடை இல்லை. அதே­போல எருமை மாடு­க­ளைக் கொல்ல முன் அனு­மதி பெற­லாம். காங்­கி­ரஸ், மதச்­சார்­பற்ற ஜனதா தளம் உள்­ளிட்ட கட்­சி­கள் இச்­சட்­டத்தை எதிர்க்­கின்­றன.

மாநில கால்­நடை பரா­ம­ரிப்­புத் துறை அமைச்சா் பிரபு சௌஹான் கூறு­கை­யில், பசு வதை தடைச் சட்­டத்­துக்­கான விதி­கள் வெகு­வி­ரை­வில் வகுக்­கப்­படும். போலிஸ் மற்­றும் கால்­நடை பரா­ம­ரிப்­புத் துறை அதி­கா­ரி­கள் மிகுந்த விழிப்­பு­டன் செயல்­பட்டு பசு உள்­ளிட்ட கால்­ந­டை­கள் வதை செய்­யப்­ப­டுவ­திலிருந்து காக்க வேண்­டும்,” என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!