அருணாசலப் பிரதேசத்தில் கிராமங்களைக் கட்டியுள்ள சீனா

அருணாசலப் பிரதேசத்தில் கிராமங்களைக் கட்டியுள்ள சீனா

1 mins read
6e44236f-b41e-48cb-ad94-10fe19fe0c66
-

இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் சீனா புதிய கிராமம் ஒன்றை அமைத்திருக்கிறது. இந்தக் கிராமத்தில் சுமார் 101 வீடுகள் இருப்பதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

சீன இந்திய எல்லைப்பகுதியில் சீனாவின் கட்டுமானப் பணிகளை இந்தப் படங்கள் காட்டுவதை இந்திய வெளியுறவு அமைச்சு மறுக்கவில்லை. சீனா கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய கட்டுமானப் பணிகளை செய்து வருவதாகத் தெரிவித்தது.

இரு நாட்டு எல்லைப்பகுதியில் இந்தியா கட்டுமானப் பணிகளைச் செய்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சு கடந்தாண்டு அக்டோபரில் தெரிவித்தது. இருந்தபோதும் அத்தகைய பணிகளை இந்தியத் தரப்பு செய்துவந்ததற்கான ஆதாரங்கள் காண்பிக்கப்படவில்லை,