அண்டை நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி விநியோகம்

அண்டை நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி விநியோகம்

1 mins read
b7c9a2af-f721-44ac-b0f3-4352145d1a34
-

இந்தியா, சுயமாகத் தயாரித்த தனது தடுப்பூசிகளை அடுத்த சில வாரங்களில் வேறு நாடுகளுக்கு விநியோகம் செய்ய உள்ளது. நேப்பாளம், பூடான், பங்ளாதேஷ், ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா அந்தத் தடுப்பூசிகளை வழங்கத் தயாராக உள்ளது. முதலில் கொடுக்கப்படும் தடுப்பூசிகள் இலவசமாகக் கொடுக்கப்படும். அதன் பின்னர் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் அந்தத் தடுப்பூசிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

கடந்த சனிக்கிழமை இந்தியா தொடங்கி வைத்த கொவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் முதல் நாள் அன்றே சுமார் 1.9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதற்கிடையே பாரத் பயோடெக் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய பிரேசில் முடிவு செய்திருக்கிறது. சைனோவேக் தடுப்பூசிக்கு 50 விழுக்காடு செயலாற்றல் மட்டும் இருப்பதால் பாரத் பயோடெக் ஊசிக்கு மாறவிருப்பதாக பிரேசிலின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.