குழந்தையைக் கேட்கும் தாய்: பிரசவமே ஆகவில்லை என்கிறது மருத்துவமனை

குழந்தையைக் கேட்கும் தாய்: பிரசவமே ஆகவில்லை என்கிறது மருத்துவமனை

1 mins read
15c482e9-fd08-4b8a-a1a3-1645af9a9d01
அதன் பிறகு என்ன நடந்­தது என்­பது தமக்­குத் தெரி­ய­வில்லை என்று கூறும் சசி­கலா, தமக்கு பிர­ச­வம் பார்த்த மருத்­து­வர்­கள் பிறந்த குழந்­தையைத் தம்­மி­டம் ஒப்­ப­டைக்­க­வில்லை என புகார் எழுப்­பி­யுள்­ளார். படம்: ஊடகம் -

பிர­ச­வத்­துக்­குப் பிறகு தனது குழந்­தையை ஒப்­ப­டைக்­க­வில்லை என நெல்­லூர் அரசு மருத்து­வ­மனை மருத்­து­வர்­கள் மீது ஒரு பெண்­மணி குற்­றம்­சாட்டி உள்­ளார்.

இந்­நி­லை­யில் அப்­பெண்­மணி கர்ப்­பம் தரிக்­கவே இல்லை என மருத்­து­வ­மனை நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

ஆந்­திர மாநி­லம் நெல்­லூ­ரைச் சேர்ந்த சசி­கலா என்ற பெண்­மணி கடந்த 5ஆம் தேதி அரசு மருத்து­வ­ம­னைக்­குச் சென்­றி­ருந்­தார். அவ­ரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள் ஜன­வரி 16ஆம் தேதி பிர­ச­வத்­துக்­காக மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட வேண்­டும் என பரிந்­து­ரைத்­த­தாக அவர் கூறு­கி­றார்.

அதன்­படி கடந்த 16ஆம் தேதி மருத்­து­வ­ம­னைக்­குச் சென்ற தமக்கு சில பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார்.

அதன் பிறகு என்ன நடந்­தது என்­பது தமக்­குத் தெரி­ய­வில்லை என்று கூறும் சசி­கலா, தமக்கு பிர­ச­வம் பார்த்த மருத்­து­வர்­கள் பிறந்த குழந்­தையைத் தம்­மி­டம் ஒப்­ப­டைக்­க­வில்லை என புகார் எழுப்­பி­யுள்­ளார். ஆனால் சசி­கலா தாய்மை அடை­ய­வில்லை என மருத்து­வ­மனை நிர்­வா­கம் திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து தமக்கு வளை­காப்பு நடத்­தப்­பட்டபோது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­கள், அரசு மருத்­து­வ­ம­னை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­கள் தொடர்­பான அறிக்­கை­கள் ஆகி­ய­வற்றை போலி­சி­டம் ஒப்­ப­டைத்­துள்­ளார் சசி­கலா.

அவர் உண்­மை­யா­கவே தாய்மை அடைந்­தாரா என வேறொரு மருத்து­வரை வைத்து போலி­சார் உறுதி செய்ய உள்­ள­னர்.