தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீடி வாங்கி வர தாமதித்த மகன் மீது தீ வைத்த தந்தை

1 mins read
dfa31ff1-2a76-455a-a691-33ce86dd707d
படம்: ஊடகம் -

புகைபிடிக்க பீடி வாங்கி வர அனுப்பிய 10 வயது மகன் தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்து அவன் மீது தீயிட்ட தந்தையை போலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுவனின் உடலில் 60 விழுக்காட்டு தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத்தில் உள்ள கேபிஎச்பி ரோட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

சிறுவன் ஆறாம் வகுப்பில் படித்து வந்ததாகவும் அவனது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவித்தன.

கடைக்கு பீடி வாங்க அனுப்பி வைத்த மகன் தாமதமாக வந்ததையடுத்து கோபமடைந்த பாலு எனும் ஆடவர், தம் மகனை சரியாகப் படிப்பதில்லை என்றும் துணைப்பாட வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்வதில்லை எனவும் கூறியவாறே அடித்ததாகச் சொல்லப்படுகிறது.

தடுத்து, மகனைக் காப்பாற்ற வந்த மனைவியை பாலு கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்