தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1,000 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைப்பு

2 mins read
f5174fcf-4a15-4501-835f-7e31b1e8eba2
பிரதமர் மோடி. படம்: ஊடகம் -

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் 27 நக­ரங்­களில் 1,000 கிலோ மீட்­டர் தொலை­வுக்கு மெட்ரோ ரயில் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இத்­த­க­வலை பிர­த­மர் நரேந்திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

அக­ம­தா­பாத் மெட்ரோ ரயில் திட்­டம் - 2, சூரத் மெட்ரோ ரயில் திட்­டம் ஆகி­ய­வற்­றுக்­கான பூமி பூசை கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்­றது.

இந்­நி­கழ்­வில் காணொளி மூலம் கலந்து கொண்டு பேசிய பிர­த­மர் மோடி, ஒரு கால­கட்­டத்­தில் நாட்­டில் மெட்ரோ ரயில் குறித்த நவீன சிந்­த­னை­யும் கொள்­கை­யும் அறவே இல்லை எனக் குறிப்­பிட்­டார்.

இதன் கார­ண­மாக நாட்­டின் பல்­வேறு நக­ரங்­களில் பல­வி­த­மான மெட்ரோ ரயில் திட்­டங்­கள் அறி­மு­க­மாகி இருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டிய அவர், அத்­த­கைய திட்­டங்­களில் சீரான தன்மை இல்லை என்­றும் பிற போக்­கு­வ­ரத்து முறை­க­ளு­டன் ஒருங்­கி­ணைப்பை ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை என்­றும் தெரி­வித்­தார்.

தற்­போது பேருந்து, ரயில் போன்ற பிற போக்­கு­வ­ரத்­து­க­ளு­டன் ஒருங்­கி­ணைந்த அணு­கு­முறை கொண்­டு­வ­ரப்­பட்டு மெட்ரோ ரயில் சேவை­கள் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக அவர் மேலும் குறிப்­பிட்­டார்.

கடந்த கால ஆட்­சி­யில் சுமார் 12 ஆண்­டு­களில் 225 கிலோ மீட்­டர் தொலை­வுக்கு மட்­டுமே மெட்ரோ ரயில் பாதை அமைக்­கப்­பட்­ட­தாக தெரி­வித்த அவர், 2014ல் பாஜக ஆட்சி பொறுப்­பேற்ற பிறகு கடந்த ஆறு ஆண்­டு­களில் 450 கிலோ மீட்­டர் தொலை­வுக்கு ரயில் பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளது என்­றார்.

இதை­ய­டுத்து நாடு முழு­வ­தும் தற்­போது 27 நக­ரங்­களில் ஆயி­ரம் கிலோ மீட்­டர் தொலை­வுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்­கப்­பட்டு வரு­கிறது என்­றும், இதன் மூலம் நாட்­டின் இரண்டு முக்­கிய வணிக மையங்­க­ளின் இணைப்பு வலுப்­ப­டுத்­தப்­படும் என்­றும் பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.

"அனைத்து வகை­ போக்கு­வ­ரத்­துக்­கும் ஒரே அட்­டை­யைப் பயன்­ப­டுத்­தும் வகை­யில் புதிய திட்­டம் வரை­ய­றுக்­கப்­பட்டு வரு­கிறது. நாட்­டின் தற்­போ­தைய மற்­றும் எதிர்­கா­லத் தேவை­க­ளைக் கருத்­தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்­டங்­கள் வடி­வ­மைக்­கப்­ப­டு­கின்­றன. இந்­தியா முழு நம்­பிக்­கை­யு­டன் முடி­வு­களை எடுத்து அவற்­றைச் செயல்­ப­டுத்தி வரு­கிறது," என்­றார் பிர­த­மர் மோடி.