தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையோரம் தூங்கிய 15 தொழிலாளர்கள் லாரி ஏறி பலி

1 mins read
46cdfc9d-ff5d-40b5-94de-472e2b6749f7
படம்: ஊடகம் -

இந்­தி­யா­வின் குஜ­ராத் மாநி­லத்­தில் சாலை­யோ­ரம் தூங்­கி­ய­வர்­கள் மீது லாரி ஏறி­ய­தால் 15 பேர் நசுங்கி மாண்­ட­னர். சூரத் நக­ரில் இருந்து சுமார் 60 கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்ள கொசாம்பா என்­னும் கிரா­மத்­தில் நேற்று அதி­காலை இந்த மோச­மான விபத்து நிகழ்ந்­தது. உயி­ரி­ழந்த அனை­வ­ரும் ராஜஸ்­தான் மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள். பிழைப்பு தேடி வந்த இடத்­தில் உயி­ரைப் பறி­கொ­டுத்­த­னர்.

சம்­பவ இடத்­தில் 12 பேர் மாண்­ட­னர். அவர்­களில் ஒரு வயது பெண் குழந்­தை­யும் அடங்­கும்.

இவ்­வி­பத்­தில் படு­கா­ய­முற்ற ஆறு பேருக்­கும் உள்­ளூர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது. லாரி ஓட்­டு­ந­ரும் அவ­ரது உத­வி­யா­ள­ரும் காய­முற்­றோ­ரில் அடங்­கு­வர். அதி­காலை வெளிச்­சம் குறை­வான சாலை­யில் கரும்­பு­களை ஏற்­றிக்­கொண்டு எதிரே வந்த டிராக்­டர் ஒன்­று­டன் உர­சிய லாரி நிலை­கு­லைந்­தது.

கட்­டுப்­பாட்டை இழந்த அந்த வாக­னம் சாலை ஓரத்­தில் தாறு­மா­றாக ஓடி­யது. அப்­போது அங்கு தூங்­கிக்­கொண்­டி­ருந்­த­வர்­கள் லாரி­யின் சக்­க­ரங்­களில் சிக்கி பலி­யா­னார்­கள் என்று சூரத்­தின் கம்­ரேஜ் பகுதி போலிஸ் துணை கண்­கா­ணிப்­பா­ளர் சி.எம். ஜடேஜா ஏஎன்ஐ செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னார். சிகிச்சை பெற்று வரும் ஓட்­டு­நர் கைதாகி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
சூரத்லாரிவிபத்து