(காணொளி) தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை தோளில் தூக்கிவைத்து கொண்டாட்டம்

(காணொளி) தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை தோளில் தூக்கிவைத்து கொண்டாட்டம்

1 mins read
63c79548-6836-4fab-8e31-7608000eaf2b
படம்: சமூக ஊடகக் காணொளி -

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை தோளில் தூக்கிவைத்து கொண்டாடிய மனைவியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் இப்போது வலம் வருகிறது.

இம்மாதம் 15ஆம் தேதி 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 14,234 பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் 2,14,880 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மகாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், பாலு என்கிற பஞ்சாயத்தில் சந்தோஷ் சங்கர் குரா என்பவர் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற சந்தோஷ் சங்கர் குராவை அவரது மனைவி ரேணுகா, தனது தோளில் தூக்கி வைத்து சாலையில் வெற்றிக் களிப்புடன் நடந்து வந்தார்.

தற்போது காணொளி, புகைப்படம் சமூக உடகங்களில் பரவி வருகிறது.