பூட்டான், மாலத்தீவுக்கு இந்தியாவின் தடுப்பூசி

அண்டை நாடுகளுக்கு இந்திய அரசாங்கம் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

பூட்டான், மாலத்தீவு, பங்ளாதேஷ், நேப்பாளம், மியன்மார் மற்றும் செசல்ஸ் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி பூட்டானுக்கு ஒரு லட்சத்து 50,000 முறை போடக்கூடிய தடுப்பூசிகளும் மாலத்தீவுக்கு ஒரு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளும் அனுப்பிவைக்கப்பட்டன.

அந்தத் தடுப்பு மருந்துகள் நேற்று முன்தினம் இரண்டு நாடுகளையும் சென்றடைந்தன.

இதனை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப் படுத்தினார்.

இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பூட்டான் மற்றும் மாலத்தீவு சென்றடைந்துவிட்டன என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே பங்ளாதேஷ் நாட்டுக்கும் இந்தியா, இருபது லட்சம் முறை போடக்கூடிய தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்ளாதேஷ் நாட்டுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசுவாமி, பங்ளா தேஷ் சுகாதார அமைச்சர் ஸாஹிட் மாலேக்கியிடம் ஆக்ஸ்போர்ட்-அஸ்திராசெனக்கா தடுப்பூசி பெட்டி களை வழங்கினார்.

இந்தத் தடுப்பூசிகள் இந்தியா வின் புனே நகரில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப் பட்டவை.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், இந்திய மக்களிட மிருந்து பங்ளாதேஷ் மக்களுக்கு வழங்கப்படுகின்றன என்று விழாவில் பேசிய பலர் சுட்டிக் காட்டினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!