புனேயில் கொவிட்-19 தடுப்பூசி தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து

புனேயில் கொவிட்-19 தடுப்பூசி தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து

1 mins read
16326dbb-f8e1-4188-a13e-47f34fbf960e
தீ விபத்தால் தடுப்பூசி உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி -

உலகின் ஆகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா' வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் இது, தடுப்­பூசி உற்­பத்­தியை பாதிக்க வில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசி தயாரிக்கும் இடத்தி லிருந்து சில நிமிட தொலைவில் உள்ள கட்டடங்களில் நேற்று பிற் பகல் தீ மூண்டு மற்ற இடங் களுக்கும் பரவியது.

பத்­துக்­கும் மேற்­பட்ட தீய­ணைப்பு வண்­டி­க­ளு­டன் தீய­ணைப்பு வீரர்­கள் தீயை அணைக்க போராடினர்.

இந்த தீ விபத்தில் ஐவர் மாண்டதாக நேற்று மாலை வெளியான தகவல்கள் தெரிவித்தன.

மின்சாரக் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

புனே நக­ரில் உள்ள இந்தத் தடுப்பூசி தொழிற்சாலையில் இங்­கி­லாந்­தின் ஆக்ஸ்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழ­க­மும் ஆஸ்ட்­ரா­ஸெ­னக்­கா­வும் உரு­வாக்­கிய 'கோவி­ஷீல்ட்' தடுப்­பூசிகள் தயா­ரிக்­கப்­பட்டு பல்­வேறு இடங்­க­ளுக்­கும் நாடு­க­ளுக்­கும் அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றன.