விடுதலையானாலும் வீடு திரும்ப நாளாகும்

விடுதலையானாலும் வீடு திரும்ப நாளாகும்

1 mins read
35c9f3b8-d34a-4a39-b8dd-bead8fe9bacf
படம்: ஊடகம் -

கொரோனா தொற்று இருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில், சசி­க­லா­வுக்கு கடு­மை­யான நுரை­யீ­ரல் தொற்று இருப்­ப­தா­க­வும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் பெங்­க­ளூரு விக்­டோ­ரியா மருத்­து ­வ­மனை தெரி­வித்­துள்­ளது.

அவர் 10 முதல் 15 நாட்­கள் மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெற வேண்­டி­யி­ருக்­கும் என கூறப்பட்டுள்ளது.

இந்­நி­லை­யில் அவர் மணிப்­பால் மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட உள்­ள­தாக நேற்று உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்­கள் கூறின.

சொத்­து­கு­விப்பு வழக்­கில் சிறைத்­தண்­டனை பெற்று பெங்­க­ளூரு பரப்­பன அக்­ர­ஹாரா சிறை­யில் இருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் நெருங்­கிய தோழி­யான சசி­க­லா­வுக்கு புதன்­கி­ழமை காய்ச்­ச­லு­டன் மூச்­சுத்­தி­ண­ற­லும் ஏற்­பட்­டு மருத்து­வ­ ம­னை­யில் சேர்க்­கப்­பட்டார்.

இதனால் இம்­மா­தம் 27ஆம் தேதி அவர் விடு­தலை ஆவது தாம­த­மா­க­லாம் என்ற செய்தி பர­வி­யது. ஆனால், திட்­ட­மிட்­ட­படி சசி­கலா விடு­தலை ஆவதில் எந்த சட்ட சிக்­க­லும் இல்லை என்­று அவ­ரது வழக்­க­றி­ஞர் அசோ­கன் கூறியுள்ளார்.