கிரிக்கெட்: நடராஜனுக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் தொட­ரில் வெற்றி பெற்ற இந்­திய அணி நாடு திரும்­பி­யுள்­ளது. இதை­ய­டுத்து சொந்த ஊர் திரும்­பிய தமி­ழக வீரர் நட­ரா­ஜ­னுக்கு ஊர் மக்­கள் உற்­சாக வர­வேற்பு அளித்­த­னர்.

சேலத்­தைச் சேர்ந்த நட­ரா­ஜன் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான ஒரு நாள் மற்­றும் டெஸ்ட் போட்­டி­களில் சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­படுத்தி­னார். அணி­யின் வெற்­றிக்கு உறு­து­ணை­யாக இருந்த அவரை பல்­வேறு தரப்­பி­ன­ரும் பாராட்டி உள்­ள­னர்.

வெற்­றிக்­கிண்­ணத்­து­டன் நாடு திரும்­பி­யது இந்­திய அணி. இந்­நி­லை­யில் நட­ரா­ஜ­னும் நேற்று முன்­தி­னம் சொந்த ஊரான சின்­னப்­பம்­பட்டி கிரா­மத்தை வந்­த­டைந்­தார். அவ­ருக்­காக சாரட்டு வண்டி ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அவர் தன் வீட்­டைச் சென்­ற­டை­யும் வரை வழி­நெ­டு­கி­லும் நூற்றுக்கணக்­கா­னோர் பட்­டாசு வெடித்து மேள­தா­ளம் முழங்க வர­வேற்பு அளித்­த­னர். அப்­போது ஊர் மக்­கள் மத்­தி­யில் அவர் சிறிது நேரம் பேசி­னார்.

வெளி­நாட்­டில் இருந்து தாய­கம் திரும்­பி­யி­ருப்­ப­தால் அவர் தன்னை இரு வாரங்­க­ளுக்கு தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்று சுகா­தா­ரத்­துறை அறி­வு­றுத்தி உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon