31 முறை கிருமித்தொற்று உறுதியானாலும் ஆரோக்கியத்துக்குக் குறைவில்லை; ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்

31 முறை கிருமித்தொற்று உறுதியானாலும் ஆரோக்கியத்துக்குக் குறைவில்லை; ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்

1 mins read
6ecd1c03-9ba8-44b9-8dcc-4036c7d390c7
ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாரதா எனும் பெண்ணுக்கு, கடந்த ஐந்து மாதங்களில் 31 முறை கொவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படம்: ஊடகம் -

5 மாதங்களில் 31 கிருமித்தொற்று பரிசோதனைகள்; அனைத்திலும் தொற்று உறுதியானாலும் ஆரோக்கியத்துக்குக் குறைவில்லை. மருத்துவர்களாலேயே விடுவிக்க முடியதாக புதிராக உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாரதா எனும் பெண்ணுக்கு, கடந்த ஐந்து மாதங்களில் 31 முறை கொவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு ஆயுர்வேத, ஹோமியோபதி, ஆங்கில மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

பரிசோதனை மேற்கொண்ட போதெல்லாம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டும் அவர் உடல்வலு குன்றாமல், நல்ல உடல்நிலையுடன் காணப்படுவது மருத்துவர்களுக்கு வியப்பளித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்