புனே: மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் உள்ள கொவிட்-19 தடுப்பூசி தயாரிக்கும் 'சீரம்' நிறுவனத்தில் சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் ஐவர் மாண்டனர். அந்த ஆலை புதிதாகக் கட்டப்பட்டு வந்தது என்பதால் அங்கு தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கப்படவில்லை. ஆயினும், இன்னும் ஒரு மாதத்தில் தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக இயந்திரங்களை நிறுவும் பணி மேற்கொள்ளப் பட்டு வந்தது. மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே விபத்துப் பகுதியை நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார். அப்போது, தீ விபத்தால் 1,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக 'சீரம்' நிர்வாகத் தரப்பு அவரிடம் தெரிவித்தது. இறந்த ஐவரின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'சீரம்' தடுப்பூசி நிறுவனத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு
1 mins read
-

