டெல்லி பேரணி: புறநகரில் 2 லட்சம் டிராக்டர்கள் குவிந்தன

டெல்லி பேரணி: புறநகரில் 2 லட்சம் டிராக்டர்கள் குவிந்தன

2 mins read
d7a0600a-4351-4d35-a826-96e4e1aec6e4
டெல்லி புறநகரில் டிராக்டர்களுடன் குவிந்துள்ள விவசாயிகள். படம்: ஊடகம் -

புது­டெல்லி: விவ­சாய சங்­கங்­கள் நாளை டெல்­லி­யில் நடத்த திட்­ட­மிட்­டுள்ள பேர­ணி­யில் சுமார் இரண்டு லட்­சம் டிராக்­டர்­கள் பங்­கேற்­கத் தயா­ராக இருப்­ப­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

டெல்­லி­யின் ஐந்து எல்­லைப் பகு­தி­களில் இருந்­தும் விவ­சா­யி­கள் அம்­மா­நி­லத்­தின் மையப்­ப­கு­திக்­குள் செல்ல தயா­ராக இருப்­ப­தாக கூறப்­படு­கிறது.

மத்­திய அரசு கொண்டு வந்­துள்ள புது வேளாண் சட்­டங்­களை விவ­சா­யி­கள் கடு­மை­யாக எதிர்த்­துள்­ள­னர். அச்­சட்­டங்­களை திரும்­பப் பெற வலி­யு­றுத்தி கடந்த இரு மாதங்­க­ளாக ஆயி­ரக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் டெல்­லி­யில் திரண்டு போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.

மத்­திய அர­சுக்­கும் விவ­சா­யக் குழுக்­க­ளுக்கும் இடை­யே­யான 11 சுற்­றுப் பேச்­சு­வார்த்­தை­யில் உடன்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.

மூன்று புதுச் சட்­டங்­களை ஒன்­றரை ஆண்டு காலம் நிறுத்தி வைப்­ப­தாக மத்­திய அரசு கூறி­ய­தை­யும் ஏற்­காத விவ­சா­யி­கள் தரப்பு நாளை டெல்­லி­யில் டிராக்­டர் பேரணி நடத்த திட்­ட­மிட்­டுள்­ளது.

எனி­னும் குடி­ய­ரசு தினத்­தன்று பேரணி நடத்த முத­லில் அனு­மதி மறுத்த டெல்லி காவல்­துறை, தற்­போது சில நிபந்­த­னை­க­ளு­டன் அனு­மதி அளித்­தி­ருப்­ப­தாக விவ­சா­யி­கள் தரப்பு தெரி­விக்­கிறது.

குடி­ய­ரசு தின அணி­வ­குப்­புக்கு இடை­யூறு ஏற்­ப­டாத வகை­யில் விவ­சா­யி­க­ளின் டிராக்­டர் பேரணி நடத்­தப்­படும் எனத் தெரி­கிறது. இது தொடர்­பாக விவ­சா­யக் குழுக்­கள் டெல்லி போலி­சா­ரு­டன் நேற்று பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.

அப்­போது பேரணி எந்த வழி­யா­கச் செல்ல வேண்­டும் என்­றும் எவ்­வ­ளவு தூரம் பேர­ணியை நீட்­டிப்­பது என்­றும் விவா­தித்து முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய விவ­சா­யக் குழுக்­க­ளின் தலை­வர்­கள், டிராக்­டர் பேரணி அதி­க­பட்­ச­மாக சுமார் 72 மணி நேரம் நீடிக்க வாய்ப்­புள்­ள­தாக தெரி­வித்­த­னர்.

பேர­ணியை ஒழுங்­கு­ப­டுத்­த­வும் தேவை­யான உத­வி­களைச் செய்­ய­வும் 2,500 தன்­னார்­வ­லர்­கள் பணி­யாற்ற உள்­ள­தாக குறிப்­பிட்ட அவர்­கள், பேர­ணியை வழி­ந­டத்த கட்­டுப்­பாட்டு அறை ஒன்று அமைக்­கப்­படும் என்­றும் கூறி­னர்.

பேரணி முடிந்த பிறகும் விவ­சா­யி­க­ளின் அமை­திப் போராட்­டம் நீடிக்­கும் என்­றும் விவ­சா­யக் குழுக்­கள் அறி­வித்­துள்­ளன.