மோடி: இந்தியாவுக்கு இந்த 10 ஆண்டுகள் உயிர்நாடி

மோடி: இந்தியாவுக்கு இந்த 10 ஆண்டுகள் உயிர்நாடி

2 mins read
41b1ae77-f78f-4bbc-82c0-8dff4e109889
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய தற்கு முன்னதாக மன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தி யாளர்களிடம் பேசினார். படம்: இந்திய ஊடகம் -

இந்­திய நாடா­ளு­மன்­றத்­தின் வர­வு­செ­லவுத் திட்ட கூட்­டத்­தொடர் நேற்று தொடங்­கி­யது.

அதி­பர் ராம்நாத் கோவிந்த் நாடா­ளு­மன்ற கூட்­டுக் கூட்­டத்­தில் உரை­யாற்றி கூட்­டத்­தொ­டரை தொடங்­கி­வைத்­தார்.

மத்­திய அர­சின் பல்­வேறு சாதனை­க­ளை­யும் பட்­டி­ய­லிட்ட அவர், கொவிட்-19 சிர­ம­மான சூழ­லி­லும் இந்­தியா குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றம் கண்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

மத்­திய அர­சாங்­கம் நிறை­வேற்றி இருக்­கும் வேளாண் மசோ­தாக்­களை மத்­திய அரசு மீட்­டுக்­கொள்­ளாது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

அதி­பர் உரையை அடுத்து நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் 2020-21 நிதி ஆண்­டுக்­கான பொரு­ளி­யல் ஆய்­வ­றிக்­கையை மக்களவை­ யில் தாக்­கல் செய்­தார்.

இந்­தி­யா­வின் புதிய வர­வு­செ­ல­வுத் திட்­டம் பிப்­ர­வரி 1ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­க­லா­கிறது.

அதற்கு முன்­ன­தாக மன்­றத்­தில் தாக்­க­லான பொரு­ளி­யல் ஆய்­வ­றிக்கை, நடப்பு நிதி ஆண்­டில் இந்­தி­யப் பொரு­ளி­யல் 7.7 விழுக்­காடு சுருங்­கும் என்­றும் அடுத்த நிதி ஆண்­டில் 11 விழுக்­காடு வரை பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு வாய்ப்பு இருப்­ப­தா­க­வும் கோடிகாட்டுகிறது.

இதனிடையே, மத்­திய அர­சாங்­கம் நிறை­வேற்றி உள்ள வேளாண் மசோ­தாக்­களை எதிர்த்து இரண்டு மாத கால­மாக போராட்­டம் நடத்தி வரும் விவ­சா­யி­க­ளுக்கு ஆத­ர­வாக நாடா­ளு­மன்றக் கூட்­டத்தொடரை 18க்கும் மேற்பட்ட எதிர்க்­கட்­சி­கள் புறக்­க­ணித்­து­விட்­டன.

இந்­நி­லை­யில், நாடா­ளு­மன்ற மக்­க­ளவை வரும் திங்­கட்­கி­ழமை வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

இவ்வேளையில், நாடா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டர் தொடங்­கி­ய­தற்கு முன்­ன­தாக மன்ற வளா­கத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பிர­தமர் நரேந்­திர மோடி, வரும் 10 ஆண்­டு­கள் இந்­திய வளர்ச்­சிக்கு உயிர்­நா­டி­யா­னவை என்று தெரி­வித்­தார்.

ஆகை­யால் அடுத்த 10 ஆண்டு­களை மன­தில் வைத்து இந்­தக் கூட்­டத்­தொ­ட­ரில் அனைத்து விவா­தங்­களும் அமைய வேண்­டும் என்று பிர­த­மர் கேட்டுக்கொண்டார்.

நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தொடரை ஆக்­க­க­ர­மான முறை­யில் நடத்தி ஒத்­து­ழைப்பு தரும்­ப­டி­ அனைத்து உறுப்­பி­னர்­களுக்கும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நடப்புக் கூட்­டத்­தொ­டர் பிப்­ர­வரி 15ஆம் தேதி வரை நடக்­கும்.

அதன்­பின் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்­ரல் 8ஆம் தேதி வரை 2வது அமர்வு நடக்­கும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரி­வித்துள்ளன.