அனைத்துலக விமான சேவைகளுக்கு பிப்ரவரி 28 வரை தடை நீட்டிப்பு

அனைத்துலக விமான சேவைகளுக்கு பிப்ரவரி 28 வரை தடை நீட்டிப்பு

1 mins read
a3cd9bca-de81-4648-860e-3af88ebb205b
படம்: ஊடகம் -

அனைத்­து­லக பய­ணி­கள் விமானச் சேவைக்­கான தடை பிப்­ர­வரி 28ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

அந்­தத் தடை ஜன­வரி 31ஆம் தேதி­யு­டன் முடி­வ­டைய இருந்­தது.

கொவிட்-19 தொற்று பரவலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் விமானச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டன.

கடந்த மே 25ஆம் தேதி உள்­நாட்டு விமானச் சேவை தொடங்­கி­யது. சிறப்பு விமா­னங்­கள் மட்­டும் வெளி­நா­டு­க­ளுக்கு இப்­போது இயக்­கப்­பட்டு வரு­கின்­றன.