டெல்லி வன்முறை: விசாரணைக் குழு அமைக்க கோரிக்கை

டெல்லி வன்முறை: விசாரணைக் குழு அமைக்க கோரிக்கை

2 mins read
72cef355-2683-4511-a072-a8814f512c18
விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் ஏராளமான போலிசாரும் அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். சிங்குர் பகுதியில் அதிகமான போலிசார் குவிக்கப்பட்டு உள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

டிராக்­டர் பேர­ணி­யின்­போது நிகழ்ந்த வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் குறித்து விசா­ரிக்க, சிறப்பு விசா­ர­ணைக் குழு ஒன்றை அமைக்க வலி­யு­றுத்தி உச்ச நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

விஷால் தாக்­கரே உள்­ளிட்ட மூன்று வழக்­க­றி­ஞர்­கள் தாக்­கல் செய்­துள்ள மனுக்­களில் டெல்லி போலி­சார் மீது மனி­த­நே­ய­மற்ற முறை­யில் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

டிராக்­டர் பேர­ணிக்­குள் புகுந்த சில குண்­டர்­கள் சட்­டத்­தைத் தங்­கள் கையில் எடுத்து செயல்­பட்­டுள்­ள­தா­க­வும், சுய­சார்பு விசா­ர­ணை­யின் மூலம்­தான் இந்த வன்­மு­றைச் சம்­ப­வம் குறித்த உண்­மை­கள் வெளி­வ­ரும் என்­றும் வழக்­க­றி­ஞர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

குண்­டர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு, வன்­மு­றைக்­குக் கார­ண­மா­ன­வர்­கள் தண்­டிக்­கப்­பட வேண்­டும் என்­றும் நீதித்­துறை நல­னுக்­காக இந்நடவடிக்கை தேவை என்­றும் அவர்­கள் வலியுறுத்தியுள்­ள­னர்.

டெல்­லி­யில் டிராக்­டர் பேர­ணி­யின்­போது நிகழ்ந்த வன்­மு­றைச் சம்­ப­வங்­களில் 300க்கும் அதி­க­மான போலி­சார், விவ­சா­யி­கள் காயம் அடைந்­த­னர். இதை­ய­டுத்து விவ­சா­யக் குழுக்­க­ளுக்குப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் கண்­ட­னம் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே புதிய வேளாண் சட்­டங்­கள் தொடர்­பாக விவ­சா­யி­க­ளுக்கு மத்­திய அரசு வழங்­கி­யுள்ள உறு­தி­மொ­ழி­யில் எந்­த­வித மாற்­ற­மும் இல்­லை­யென பிர­த­மர் மோடி திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

வேளாண் அமைச்­சர் வழங்­கிய திட்ட முன்­மொ­ழிவு இப்­போ­தும் நீடிப்­ப­தாக டெல்­லி­யில் நடை­பெற்ற அனைத்­துக்­கட்சிக் கூட்­டத்­தில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

வேளாண் சட்­டங்­கள் தொடர்­பான பிரச்­சி­னையை மத்­திய அரசு திறந்த மன­து­டன் அணு­கு­வ­தா­க­வும் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­துச் செல்ல வேளாண் அமைச்­ச­ருக்கு ஒரு தொலை­பேசி அழைப்பு விடுத்­தால் போது­மென்­றும் பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில் மத்­திய அர­சு­ட­னான பேச்­சு­வார்த்­தைக்­கான கத­வு­கள் அடைக்­கப்­பட்­ட­தாக வெளி­யான தக­வல் உண்மை அல்ல என சம்­யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற விவ­சாய அமைப்பு தெரி­வித்­துள்­ளது. பிப்­ர­வரி 2ஆம் தேதி இருதரப்புக்­கும் இடையே 12ஆம் சுற்று பேச்­சு­வார்த்தை நடை­பெற இருக்கிறது.