டெல்லி முழுவதும் தடுப்பரண்கள் அமைப்பு

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இடையூறின்றி நடக்க நடவடிக்கை

புது­டெல்லி: நாடா­ளு­மன்­றத்­தில் நிதி­நிலை அறிக்கை தாக்­கல் செய்­யப்­ப­டு­வதை ஒட்டி டெல்­லிக்­குள் விவ­சா­யி­கள் ஊடு­ருவ முடி­யா­த­படி நேற்று பர­வ­லாக தடுப்­ப­ரண்­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன.

துணை ராணு­வப் படை­யி­ன­ரும் டெல்லி போலி­சா­ரும் தீவிர கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

குடி­ய­ரசு தினத்­தன்று போராட்­டக்­கா­ரர்­கள் செங்­கோட்­டைக்­குள் நுழைந்­த­து­டன் வன்­மு­றை­யி­லும் ஈடு­பட்­ட­தாக புகார் எழுந்­துள்ள நிலை­யில் மீண்­டும் அது­போன்ற சம்­ப­வம் நிகழ்­வ­தைத் தவிர்க்­கவே தடுப்­ப­ரண்­கள் அமைக்­கப்­பட்­ட­தாக காவல்­துறை தரப்­பில் விளக்­கம் அளிக்­கப்­பட்­டது.

டெல்­லி­யின் சில பகு­தி­க­ளி­லும் புற­ந­கர்ப் பகு­தி­க­ளி­லும் இணை­யச் சேவை நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. நாடா­ளு­மன்­றம் அமைந்­துள்ள பகு­தி­யில் போலி­சார் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். புற­ந­கர்ப் பகு­தி­களில் துணை ராணு­வப் படை­யி­னர் அதி­க­ள­வில் நிறுத்­தப்­பட்­டி­ருந்­த­னர்.

இதற்­கி­டையே டெல்­லி­யில் டிராக்­டர் பேரணி முடிந்த பிறகு நூற்­றுக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளைக் காண­வில்லை என விவ­சா­யக் குழுக்­கள் தெரி­வித்­துள்­ளன. மாய­மா­ன­வர்­க­ளின் நிலை குறித்து கண்­ட­றிய ஒன்­பது பேர் கொண்ட சிறப்­புக்­குழு ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

போராட்­டத்­தின்போது வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­வர்­களை அடை­யா­ளம் காண்­ப­தில் போலி­சார் தீவி­ர­மாக உள்­ள­னர். செங்­கோட்­டை­யில் அத்­து­மீறி நுழைந்த ஐந்து பேர் அடை­யா­ளம் கண்­டி­ருப்­ப­தா­க­வும் அவர்­களை விசா­ரிக்க இருப்­ப­தா­க­வும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

“குடி­ய­ரசு தினத்­தன்று வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­த­தால் பாது­காப்பை பலப்­ப­டுத்­தும்­படி மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது. நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தொ­டர் நடக்­கும் போது அவைக்கு வெளியே போராட்­டங்­களும் வன்­மு­றை­யும் நிகழ்­வதை மத்­திய அரசு விரும்­ப­வில்லை,” என்று காவல்­துறை அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­த­தாக இந்­திய ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

விவ­சா­யி­கள் அதி­கம் கூடும் பகு­தி­களை டெல்லி போலி­சார் ஆளில்லா சிறிய ரக விமா­னம் மூலம் கண்­கா­ணித்து, நிலைமை கட்­டுக்­குள் இருப்­பதை உறுதி செய்­கின்­ற­னர். இந்­நி­லை­யில் டெல்­லி­யில் நடக்­கும் போராட்­டத்­துக்குப் பண உதவி செய்­ப­வர்­கள் யார் என்­பது குறித்து அம­லாக்­கத்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!