சாலையில் இரும்பு ஆணிகள்: டெல்லி காவல்துறைக்கு கண்டனம்

சாலையில் இரும்பு ஆணிகள்: டெல்லி காவல்துறைக்கு கண்டனம்

2 mins read
9a732f8d-15ad-49dd-a608-cb3f937cd02c
காசிபூர், டிக்ரி, சிங்கு உள்ளிட்ட டெல்லியின் எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற தடுப்பரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். படம்: ஊடகம் -

புது­டெல்லி: விவ­சா­யி­கள் டெல்லி நக­ருக்­குள் நுழை­வதை தடுப்­ப­தற்­காக சாலை­களில் இரும்பு ஆணி­களை பதித்து தடுப்­ப­ரண் அமைத்­துள்­ளது டெல்லி காவல்­துறை. இதற்கு பல்­வேறு தரப்­பி­ன­ரும் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

புதிய வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக விவ­சா­யி­கள் கடந்த இரு மாதங்­க­ளுக்கு மேலாக டெல்­லி­யில் முகா­மிட்டு தீவிர போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

கடந்த குடி­ய­ரசு தினத்­தன்று நடை­பெற்ற விவ­சா­யி­க­ளின் டிராக்­டர் பேரணி வன்­மு­றை­யில் முடிந்­தது. அப்­போது ஒரு­வர் கொல்­லப்­பட்­டார்.

இதை­ய­டுத்து டெல்­லி­யில் பல்­வேறு பகு­தி­களில் போலி­சார் தடுப்­ப­ரண்­கள் அமைத்­துள்­ள­னர். குறிப்­பாக டெல்லி நக­ருக்­குள் நுழைய விவ­சா­யி­கள் பயன்­ப­டுத்­தும் ஐந்து எல்­லைப் பகு­தி­களில் துணை ராணு­வப் படை­யைக் குவித்து கான்­கி­ரீட்­டால் ஆன தடுப்­புச்­சு­வர்­களை அமைத்­துள்­ளது டெல்லி காவல்­துறை.

மேலும் இரண்­ட­டுக்கு இரும்­புத் தடுப்­பு­களை அமைத்­துள்ள போலி­சார், இரும்பு ஆணி­க­ளை­யும் சாலை­களில் பதித்­துள்­ள­னர். இந்த தடுப்­ப­ரண்­க­ளைக் கடந்து டெல்லி நக­ருக்­குள் நுழை­வது விவ­சா­யி­க­ளுக்கு மிகக் கடி­ன­மாக இருக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் சாலை­களில் இரும்பு ஆணி­கள் பதிக்­கப்­பட்­ட­தற்கு பல்­வேறு தரப்­பி­ன­ரும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே டிராக்­டர் பேர­ணி­யில் பங்­கேற்ற ஏரா­ள­மான இளை­யர்­கள் மாய­மாகி உள்­ள­தாக மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­வி­டம், காங்­கி­ரஸ் எம்.பி. மணீஷ் திவாரி முறை­யிட்­டார்.

அவ­ரும் பஞ்­சாப் மாநில அமைச்­சர்­கள் இரு­வ­ரும் அமித்­ஷாவை சந்­தித்­துப் பேசி­னர். அப்­போது டெல்லி செங்­கோட்­டையை முற்­று­கை­யிட்டு போராட்­டத்­தில் ஈடு­பட்ட இளை­யர்­கள் பலர் போலி­சா­ரால் கைது செய்­யப்­பட்­ட­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

பஞ்­சாப் இளை­யர்­கள் அதி­க­ள­வில் கைதாகி இருப்­ப­தா­க­வும் அவர்­கள் இன்­னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை என்­றும் மணீஷ் திவாரி சுட்­டிக்­காட்­டி­னார்.

இளை­யர்­கள் எங்கு உள்­ள­னர் என்­பது தெரி­ய­வில்லை என்று பஞ்­சாப் அமைச்­சர்­கள் கூறி­யதை கேட்­டுக்­கொண்ட அமித்ஷா, இது­கு­றித்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என உறுதி அளித்­த­தா­கத் தெரி­கிறது.

இதற்கிடையே, வரும் 6ஆம் தேதி நாடு தழுவிய அளவில் மூன்று மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய குழுக்கள் அறிவித்துள்ளன. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவை கேட்டுக் கொண்டுள்ளன.